தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் நடித்த ப்யார் ப்ரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் ப்ரியா பவானி சங்கருடன் அவர் நடித்த ஓ மன பெண்ணே படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷை வைத்து அடங்காதே படத்தை இயக்கியிருக்கும் சண்முகம் முத்துசாமியின் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என தகவல் வெளியானது. அதனை அடுத்து, இயக்குனர் சசியின் ‘நுறு கோடி வானவில்’ படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் அறிமுக நாயகியாக சித்தி இதானி நடிக்க இருக்கிறார்.
சொல்லாமலே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் சசி, ரோஜா கூட்டம், டிஷ்யூம், பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். 2019-ம் ஆண்டிற்கு பிறகு இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குனர் சசி, இந்த படத்தை இயக்கி வருகிறார். ஜனவரி 14-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கும் நிலையில் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி பிரகாஷ் குமார், நடிகர் சித்தார்த் ஆகியோர் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர்.
இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி பிரகாஷ் குமார், நடிகர் சித்தார்த் ஆகியோர் படத்தின் மோஷன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டானர். காதலை மையகாகக் கொண்ட கதை களம் என படக்குழு தெரிவித்திருக்கிறது. ஹரிஷ் கல்யாண், சித்தி ஆகியோருடன் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத், வி.ஜே பார்வதி ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்