நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை அலியா பட் ஜோடிக்கு நவம்பர் 6ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் பெயர் மற்றும் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை அலியா பட் பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பதிவில், தனது மகளுக்கு ராஹா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஹா, தெய்வீக பாதை என்று பொருள்படும் என்றும்,
சுவாஹிலியில் அவள் மகிழ்ச்சி,
சமஸ்கிருதத்தில்- ராஹா ஒரு குலம்,
பெங்காளியில் - அமைதி, ஆறுதல், நிவாரணம்,
அரபில் -அமைதி,
அதாவது மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் பேரின்பம் என்றும் பொருள்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
”நன்றி ராஹா, எங்கள் குடும்பத்தை உயிர்ப்பித்ததற்கு, எங்கள் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கிவிட்டது போல் உணர்கிறது” எனவும் அன்பில் உருகியுள்ளார் அலியா பட்.
பாலிவுட்டின் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் ரன்பீர் கபூர். தனது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை நாடு முழுவதும் கொண்டுள்ள இவரும் பாலிவுட்டின் முக்கிய நடிகைகளுள் ஒருவரும், இயக்குநர் மகேஷ் பட்டின் மகளுமான அலியா பட்டும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த வந்தனர். இந்த நிலையில் இவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி இவர்கள் திருமண நடந்தது.
கடந்த மாதம் அலியாவுக்கு வளைகாப்பு விழா அவரது மும்பை இல்லத்தில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது. அந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தன
இதையடுத்து (நவம்பர் 6ஆம் தேதி) காலை அலியா பட் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதை தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான அழகிய பதிவு ஒன்றை அலியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
என்ன ஒரு மாயக்கார பெண்! நாங்கள் அதிகாரப்பூர்வமாக அன்பில் திளைக்கிறோம். இப்படிக்கு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர் அலியா - ரன்பீர்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ராஹா என குழந்தைக்கு பெயர் வைத்திருப்பதை, அனைவருக்கும் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read: Nayanthara: யோசிக்காமல் ரூ.4 லட்சம் கொடுத்த நயன்தாரா...நெகிழ்ந்துபோன மாமியார்..என்ன நடந்தது?