நடிகை நயன்தாரா குறித்து அவரது கணவர் விக்னேஷ் சிவனின் அம்மா புகழ்ந்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான நயன்தாரா கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படத்தில் நடிக்கும் போது, அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கிட்டதட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். மாமல்லபுரத்தில் ரிசார்ட் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். 






இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தேனிலவிற்கு சென்று திரும்பிய பிறகு தங்களது பட வேலைகளில் பிசியாக இருந்து வந்தனர். இதனிடையே சரியாக 4 மாதங்கள் கழித்து தங்களுக்கு வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தங்கள் சமூக வலைத்தளங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி அறிவித்தனர். இந்த வாடகைத்தாய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் சட்டமுறைப்படி அவர்கள் நடந்துக் கொண்டது தெரிய வந்தது. 


மேலும் குழந்தைகளுடன் தலை தீபாவளி, நயன்தாரா பிறந்தநாள் என மண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நயனை புகழ்ந்து அவரது மாமியார் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், நயன்தாரா வீட்டில் 4 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் பணியாட்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு பெண் சோகமாக இருந்ததைக் கண்டு என்னவென்று நயன் கேட்டார். உடனே ரூ. 4 லட்சத்தை எடுத்து கொடுத்து கடனை அடைங்க என சொன்னார். நான் இதையெல்லாம் பார்த்துட்டுதான் இருந்தேன். 






நடிகை தானே கொடுக்கலாம் என நினைக்கலாம். ஆனால் கொடுப்பதற்கும் ஒரு மனசு வேண்டும். அதேசமயம் அந்த பணிப்பெண்ணும் அந்த அளவுக்கு எங்களுக்காக உழைச்சிருக்காங்க. மேலும் நயனின் அம்மா கேரளாவில் இருந்து வந்து அப்பெண்ணுக்கு தங்க வளையல் போட்டாங்க. அந்த அபார்ட்மெண்ட் சுற்றி கேமரா இருக்கு. நயனிடம் கேட்காமல் காஃபியோ, சாப்பாடோ எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் நம்பிக்கை வரும் வரை ஒரு இடத்துல இருந்தோம்ன்னா நல்லது கெட்டதை அவங்க பார்த்துப்பாங்க. எங்க வீட்டுல இருந்த ஒரு பெண்ணுக்கு நான் 5 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணி வச்சேன் என நயன்தாராவின் மாமியார் தெரிவித்துள்ளார்.