தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். கிங் ஆப் ஓபனிங் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அவரின் திரைப்படங்களுக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் தமிழ்நாட்டில் உண்டு. அவரது நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.




Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இசையமைப்பாளர் இமான் இசையில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக, தந்தை- மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் கண்ணான கண்ணே பாடல் அனைவராலும் விரும்பப்பட்டு, மாபெரும் ஹிட்டானது. இந்த பாடல் லஹாரி டி சீரிஸ் சார்பில் பாடல் வரிகளுடன் கூடிய வீடியோவாக வெளியிடப்பட்டது.


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


இந்த நிலையில், இந்த பாடல் தற்போது 150 மில்லியன் பார்வையாளர்களை யூ டியூப்பில் கடந்துள்ளது. கவிஞர் தாமரை எழுதிய இந்த பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடினார். தந்தை – மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் பாடலான இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த பாடல் 1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.




சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் அஜித். நயன்தாராவுடன் தம்பி ராமையா, யோகிபாபு, விவேக், ரோபோ சங்கர், ஜெகபதிபாபு ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்தததற்காக இசையமைப்பாளர் இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடலுக்காக விருது பெற்றது குறித்து இசையமைப்பாளர் இமான், கண்ணான கண்ணே பாடலுக்கு விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது. இந்த பாடலுக்கான விருதை அனைத்து அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்