பொதுவாகவே திருமணம் ஆகிவிட்டால் போது சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித் திரையாக இருந்தாலும் சரி நடிகைகள் மட்டும் நடிப்புக்கு முழுக்குப் போடுவது 90% நடந்துவிடுகிறது. அதனால் தானோ என்னவோ, நான் இன்னும் ஃபீல்டில் தான் இருக்கிறேன் என்பது போல் சூட்டோடு சூடாக நாடகத்திற்கு ஒப்பந்தமாகியிருக்கிரார் ஸ்ரேயா அஞ்சன்.


கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்திய அழகி:


சினிமா நடிகைகளுக்கு மட்டுமில்லீங்க நம்மூரில் சீரியல் நடிகைகளுக்கும் ஃபேன்ஸ் கிளப் எல்லாம் இருக்கிறது. எல்லாப் புகழும் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளுக்கே செல்லும். சினிமாவில் சிச்சுவேஷன் சாங்கெல்லாம் போட்டு ரொமான்டிக் காட்சிகள் எல்லாம் அமைத்து அவுட்டோரில் அசால்டாக படப்பிடிப்பு நடத்தி  சினிமாப் பெயர்களையே சூட்டி சீரியல் தயாரித்து வருகின்றனர். சீரியல் தயாரிப்பாளர்கள் சினிமாவுக்கே ஃபைனான்ஸ் பண்ணும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர்.


விஜய் டிவியில் ஒரு புதிய சீரியல் வந்தால் போட்டாப் போட்டியாக கலர்ஸ் தமிழிலும், ஜீ தமிழிலும் புதிய சீரியல்கள் வந்துவிடும். இப்படியாக சீரியல் பிசினஸ் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில், கலர்ஸ் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா அஞ்சன் திருமணம் என்ற சீரியலில் நடித்தார். இவருடன் சித்து என்பவர் நாயகனாக நடித்தார். ரீல் ஜோடியாக காதலில் கசிந்துருகிய சித்து, ஸ்ரேயா அஞ்சன் சீரியல் நடந்து கொண்டிருந்தபோதே காதல் வயப்பட்டனர். அண்மையில் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.




திருமணம் பற்றி சித்து, இன்ஸ்டாகிராமில் தனது திருமணம் பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர், "திருமணம் சீரியல் பண்ணும் பொது எனக்கு கொஞ்சம் கூட தெரியாது இந்த பொண்ணு தான் என் பொண்ண்டாட்டியா வரப்போகுதுனு.. எங்க ஆடியன்ஸ் சொல்வாங்க நீங்க ரெண்டு பேரும் ஒரு மேஜிக்னு.. அது உண்மை தான் போல. அழகான ஃபீலிங்.. நான் கேட்காமலேயே கெடச்ச வரம் தான் ஸ்ரேயா. ஐ லவ் யூ பொண்டாட்டி" எனப் பதிவிட்டிருந்தார்.


இப்படி ரசித்து ரசித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, முடிந்த கையோடு ஹனிமூன் போவார்கள் என்று எதிர்பார்த்தால் புதுப் பொண்ணு ஸ்ரேயா சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார்.


ஏற்கெனவே விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார். இப்போது ஜீ தமிழில் ஒரு சீரியலில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த சீரியலின் பெயர் என்ன? இதில் ஸ்ரேயா அஞ்சனுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் கதாநாயகன் யார் என்பதும்   சில நாட்களுக்குள் வெளியாகும் ப்ரோமோவில் தெரிந்துவிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது