வலிமை படத்தில் மெட்ரோ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தங்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக, மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.


ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் 


அந்த மனுவில், ‘ மெட்ரோ படத்தில் வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போலவே வலிமை படத்திலும் காட்சிகள், கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்பதால் இதன் சாட்டிலைட் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். 


17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு


இந்த வழக்கானது நீதிபதி செந்தில் குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 17 ஆம் தேதிக்குள் ஹெச். வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை  அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறார்.   இந்த வழக்கு தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 


அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான அன்றைய நாள், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத் திரைப்படத்தை பெரும்பான்மையான திரைப்பட விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். சிலர் அஜித்தை தனிமனித தாக்குதலுக்கும் உட்படுத்தினர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல படத்தை பார்த்த பலர் படம் நன்றாகவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் பெரும்பான்மையான காட்சிகள், பைக் ஸ்டண்ட் சார்ந்தவை என்பதால், டூப் இல்லாமல் அஜித் ரிஸ்க் எடுத்து அந்த ஸ்டண்டுகளில் நடித்திருந்தார். இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது அஜித்திற்கு பலமுறை காயமும் ஏற்பட்டது. 


Also Read | Maaran Review: மாறன் படத்தை மாறி மாறி பார்க்க முடியுமா? தனுஷ் படத்தில் இது ஒரு தினுசு... சுடச்சுட சுட்டிக்காட்டும் விமர்சனம் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண