தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் இவருக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் ஏன் சர்வதேச அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
பேட்டி, படத்தின் புரமோஷன் போன்ற பணிகளில் தலையை காண்பிக்க விரும்பாத ஒரு நடிகர். எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு வைத்திருக்கமால் இருக்கும் இவரின், புகைப்படங்கள் வெளியானாலே அதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அதைப்போல் யாருக்காவது உதவி என்றால் தயங்காமல் அள்ளிக் கொடுத்து உதவி செய்வதில் அஜித் வல்லவர். அதிலும் குறிப்பாக அதனை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வதற்காக அவர் பல வகையில் முயற்சி செய்வார். தான் யாருக்கு உதவினேன், எதற்காக உதவினேன் என தெரியமால் பார்த்துக் கொள்வார்.
இந்நிலையில் நடிகர் அஜித் விமானத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகளை அழைத்துச் சென்று, சந்தோஷப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி நிகழ்ந்துள்ளது. அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சும்மாவே அஜித் புகைப்படம் வெளியானால் அதனை ட்ரெண்ட் செய்வதில் அஜித் ரசிகர்கள் வல்லவர்கள். அந்த வகையில் இந்த படமும் வைரலாகி வருகிறது
தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கிவரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். சண்டை காட்சிகளைப் படமாக்குவதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் ரஷ்யா சென்று உள்ளனர். செப்டம்பர் 3ஆம் தேதியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் தீபாவளி பண்டிகைக்கு படம் சர்பிரைஸாக வெளியாகும் என அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக படத்தின் ஷூட்டிங் பணிகள் தாமதாமாகின என்பது குறிப்பிடத்தக்கது.