தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா. 50 வயதை கடந்தாலும் அவரது மகன் நாகசைதன்யா உள்பட இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்தில் இருப்பவர். இவர் தற்போது பிரவீன் சத்தாரு இயக்கத்தில் நடித்து வருகிறார். நாகர்ஜூனாவின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடித்து பிரவீன் சத்தாரு இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றம் போஸ்டர் வெளியிடப்பட்டது.






இந்த போஸ்டரை படத்தின் நாயகியும், முன்னணி ஹீரோயின்களில் ஒருவருமான நடிகை காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்திற்கு ஹோஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் முழுக்க, முழுக்க ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் நாகர்ஜூனா கையில் கத்தியுடன் நிற்க, அவர் முன் வெளிநாட்டுக்காரர்கள் பலரும் மண்டியிட்டு கையை தூக்கி இருப்பது போல உள்ளது. போஸ்டரின் பிண்ணனியில் லண்டன் உள்ளது. நாகர்ஜூனாவின் ரசிகர்கள் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 




இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் லண்டனில் நடக்கும் விதத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ராணுவம், உளவுத்துறை சார்ந்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வால் இந்த படத்தில் ரா உளவுத்துறை ஏஜெண்டாக நடிக்கிறார்.


இதுவரை காஜல் அகர்வால் தான் நடித்துள்ள படங்களில் ஏற்றிராத கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளார். நாகர்ஜூனாவிற்கு இணையாக கதாபாத்திரத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தொடக்கத்தில் நாகர்ஜூனாவிற்கு துணையாக நடிக்கும், காஜல் அகர்வால் இறுதியில் அவருக்கே எதிரி போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வௌியாகி உள்ளது.




இந்த படத்தை நாராயண் தாஸ் நாரங், சரத்மரார், புஷ்கர்ராம் மோகன்ராம் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் எடிட்டிங் பணியை தர்மேந்திர காகர்லா மேற்கொள்கிறார். படத்திற்கான ஒளிப்பதிவை முகேஷ் மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரத்-சரப் அமைக்கின்றனர். இந்த படத்தின் கதைக்களமும், படத்தின் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


”எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா !” - விரைவில் டும் டும் டும்! திருமணத்திற்கு தயாராகும் திரிஷா?