அவல் குறைந்த கலோரி கொண்ட ஊட்டச்சத்து மிக்கது. கிருஷ்ணனுக்கு அவல் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுவதுண்டு. அவல் லட்டு செய்து இந்த கிருஷ்ணன் ஜெயந்தியை கொண்டாடுங்கள்.
தேவையான பொருள்கள்
அவல் - 1 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலப்பொடி - சிறிதளவு
பால் - அரை கப்
நாட்டு சர்க்கரை - 1 கப்
நெய் - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2 கப்.
செய்முறை:
- அவல் மற்றும் பொட்டுக்கடலை இரண்டையும் வாணலியில் போட்டு வறுத்து கொள்ளவும். இவை இரண்டும் ஆறிய பிறகு மிக்ஸியில் ஒன்றிடண்டாக அரைத்து கொள்ளவும்.
- பின் வாணலியில், நெய் ஊற்றி அதில், முந்திரி திராட்சை இரண்டையும் வறுத்து கொள்ளவும்.
- வறுத்து எடுத்து வைத்து கொண்டு, நெய்யில் தேங்காய் துருவலை லேசாக வறுத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் அரைத்த அவல் , பொட்டுக்கடலை கலவை, ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சை, பால்,நெய் சேர்த்து ஒன்றாக கலந்து லட்டுகளாக பிடித்து கொள்ளவும்.
- கிருஷ்ணா ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு தயார்
அவல் மிக எளிமையாக செரிமானம் ஆக கூடிய குறைந்த கலோரி அதிக நார்சத்து கொண்ட உணவு.இது எடுத்து கொள்வதால், உடல் எடை அதிகமாகாமல் இருக்கும். உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் இதை ஒரு காலை அல்லது இரவு உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். எப்போதும், இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்து போய் இருப்பவர்களுக்கு இந்த அவல் உணவு சிறந்த மாற்றாக இருக்கும். அவல் உப்புமா, அவல் பாயசம், அவல் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அவல் லட்டு, அவல் புட்டு போன்றவை கொடுக்கலாம். இது ஆரோக்கியமான உணவாகவும், குழந்தைகள் எடுத்து கொள்வதால், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும்.
மிக குறைந்த நேரத்தில் சமைக்க கூடியது. மேலும், அரிசியில் இருந்து அவல் தயாரிக்கப் பட்டது. இப்போது சிவப்பு அரிசியில் இருந்து அவல் தயாரிக்கபடுகிறது. கம்பு, சோளம், போன்ற சிறுதானியங்களில் இருந்தும் அவல் தயாரிக்கப் படுகிறது. இது அரிசியில் இருக்கும் வைட்டமின் பி சத்துகள் நிறைந்து இருக்கிறது. ஆண்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்த , க்ளுட்டன் இல்லாத உணவு. இதில் நார்சத்து, மற்றும் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. பாலிஷ் செய்து சத்து குறைந்த வெள்ளை அரிசிக்கு இந்த அவல் சிறந்த மாற்றாக இருக்கும்.