நடிகர் அஜித்குமாரின் 42வது திரைப்படமான விடாமுயற்சியின் படபிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். தற்போது படத்தின் இரண்டாவது கட்டமாக மீண்டும் அசர்பைஜானிலேயே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 


விடாமுயற்சி திரைப்படத்தின் படபிடிப்பு, கடந்த அக்டோபர் மாதத்தில்,அசர்பைஜானிலேயே துவங்கப்பட்டு படத்தின் ஆக்க்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.


இரண்டாம் கட்ட படப்பிடிப்பு


சில தினங்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அசர்பைஜானிலேயே இரண்டாவது கட்ட படபிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அஜித், அர்ஜூன், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது அசர்பைஜானில் நடந்து வரும் படபிடிப்பில் பிஸியாக உள்ளனர். படத்தில் இடம்பெறும் கார் சேஸிங் காட்சிகள் இரண்டு வாரங்கள் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது.


புகைப்பட கலைஞர் அஜித்


பிப்ரவரி மாதம் வரையில் அசர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு தொடரும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் துபாய், சென்னை போன்ற இடங்களிலும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஷூட்டிங்கின் இடையில் நடிகர் அஜித் போட்டோகிராபராக மாறி சக நடிகர்களை படம் எடுத்துவருவது குறித்து சமீபத்தில் செய்திகள் வெளியானது.  அஜித், அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினரை வித்தியாசமான கோணத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.


சிக்கன் கிரேவி சமைத்த அஜித்


இதுமட்டும் அல்லாமல்,  நடிகர் அஜித் தன்னுடைய சமையல் திறமையையும் இந்த படபிடிப்பில் வெளிப்படுத்தி வருகிறாரம்.  சமீபத்தில் படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியில் அவர் சிக்கன் கிரேவி சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறியுள்ளார். இதன் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


அஜித் படபிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு உணவு சமைத்து பரிமாறுவதை வாடிக்கையாக்கி வருவதாகவும் அவரது சமையல் அனைவரையும் கவர்ந்து வாவ் சொல்ல வைத்துள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்துக்கிடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கி பிஸியாக நடைபெற்று வருவதுடன் படப்பிடிப்பு குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க 


IND vs SA 1st ODI LIVE: 117 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா நிதான ஆட்டம்; நெருக்கடி கொடுக்க தென்னாப்பிரிக்கா முயற்சி


கனமழை எதிரொலி; தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி நெல்லை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை