Kamal Haasan: எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை ஆய்வு செய்தார்.
எண்ணூர் எண்ணெய் கசிவு:
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட போதிலும் எண்ணூர் பகுதி மக்களின் வாழ்க்கை 10 நாட்களுக்கு மேலாக ஸ்தம்பித்துள்ளது. கடந்த 5ஆம் தேதி சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாய் கலந்து எண்ணூர் முகத்துவாரம் தொடங்கி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை பரவி உள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ள பல நூறு படங்கள் மற்றும் மீன்பிடி வளைக்ள மீது எண்ணெய் கசிவு படிந்ததால், அவை பயன்படுத்த உகந்த நிலையில் இல்லை.
எண்ணெய் படிந்த பகுதிகளில் எல்லாம் கடந்த ஒரு வாரமாக பெட்ரோலிய நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் செத்து மிதக்கின்றன. இதுதொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழக அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகின்றனர்.
நேரில் ஆய்வு செய்த கமல்ஹாசன்:
இந்நிலையில், எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை ஆய்வு செய்தார். பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த இடத்திற்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். கடந்த காலத்தை விட அதிமாக தான் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்றுக்குள் எண்ணெய் கழிவு அகற்றுவது போல் ஒரு அறிகுறியும் இல்லை. எண்ணெய் கழிவுகள் அறு, கடலில் கலந்ததற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் நிறுவனத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நதியை நம்பி வாழலாமே தவிர, அதை வைத்து விளையாடக் கூடாது. ஒவ்வொரு முறையும் இதுபோன்று நடக்கும்போது நிவாரணம் கொடுத்து தப்பிக்க முடியாது. இது மீனவர்கள் பூமி. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்" என்றார் கமல்ஹாசன்.
மேலும் படிக்க