லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

Continues below advertisement

அப்பா சங்கி இல்லை

லால் சலாம் ஆடியோ விழாவில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  “எங்க அப்பா ரஜினிகாந்தை சங்கி என விமர்சிக்கிறார்கள். எனக்கு அதைக் கேட்டதும் வருத்தமாக உள்ளது. ரஜினி ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்தப் படம் பண்ண முடியாது. இந்தப் படத்தில் அவரைத் தவிர யாரும் தைரியமாக நடித்திருக்க மாட்டார்கள். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி லால் சலாம் படம் நிச்சயம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த நிச்சயமாக சங்கி இல்லை. இந்தப் படம் பார்த்தால் உங்களுக்கு புரியும்” என்று கூறியிர்ந்தார். 

ரஜினியின் காட்சிகள்

லால் சலாம் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் என்று சொல்லலாம். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். வழக்கமான கெளரவக் கதாபாத்திரங்களைப் போல் அல்லாமல் ரஜினியின் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முதல் 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ரஜினியின் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும், இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைய வாய்ப்பிருப்பதாகவும் கருதப்பட்டது. இதனால் ரஜினிகாந்தின் காட்சிகள் படத்தில் இன்னும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

சென்சார் சான்றிதழ்

லால் சலாம் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக லைகா ப்ரோடக்ஷ்ன்ஸ் தங்களது எக்ஸ் தளத்தில் தகவல்  வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் நீளம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டரை மணி நேரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காட்சிகள் மட்டும் சுமார் 1 மணி நேரத்திற்கு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : Actress Chaitra Praveen: ஆடை பற்றி அநாகரிகமான கமெண்ட்.. பதிலடி கொடுத்த நடிகை சைத்ரா பிரவீன்