Actress chaitra praveens: படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மலையாள நடிகை சைத்ரா பிரவீன் ஆடை குறித்து தவறான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது தன்னுடைய அம்மாவின் சேலை என அந்த நடிகை விளக்கம் அளித்துள்ளார். 

 

மலையாளத்தில் ஏ.எம். சித்திக் இயக்கிய எல்.எல்.பி. படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. மூன்று நண்பர்களின் கதையாக உருவாகியுள்ள எல்.எல்.பி. படத்தில் நடித்துள்ள சைத்ரா பிரவீன் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. அண்மையில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சைத்ரா பிரவீன், கருப்பு நிறத்திலான நெட் சேலை அணிந்து வந்தார். அந்த சேலைக்கு ஸ்கின் கலரில் பிளவுஸ் அணிந்திருந்தார். 

 

அதை பார்த்த நெட்டிசன்ஸ், அவரது உடை குறித்து விமர்சித்து கமெண்ட் செய்தனர். நடிகை சைத்ரா பிரவீன் மீதான விமர்சனங்கள் இணையத்தில் வைரலானது. அதில் ஒருவர் சைத்ரா பிரவீனை கோழிக்கோட்டின் அவமானம் என குறிப்பிட்டிருந்தார். தன் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு நடிகை சைத்ரா பிரவீன் பதிலடி கொடுத்துள்ளார். 

 

இது தொடர்பாக பேசிய அவர், ”நான் கோழிக்கோட்டை சேர்ந்தவள். இதை பெருமையுடன் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன். என்னை கோழிக்கோட்டின் அவமானம் என ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதை பார்த்து வருத்தப்பட்டேன். அன்று நிகழ்ச்சியில் நான் அணிந்திருந்தது எனது அம்மாவின் சேலை. அதில் பிளவுசும் இருந்தது. என்னை பற்றி பேச வேண்டும் என்று நான் அந்த உடை அணிந்து வரவில்லை. நான் அணிந்திருந்த சேலையை பார்த்த என் அம்மா, நான் கறுப்பு நிற சேலையில் அழகாக இருப்பதாக கூறினார். 





 

பல் மருத்துவரான நான் மாடலிங் மூலமாக தான் நடிக்க வந்தேன். சிறுவயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் கஷ்டப்பட்டு நடிக்க வந்தேன். நான் எந்த உடை அணிந்தாலும் அதை உற்றுப்பார்க்கும் சில என்ன சொல்வது. சேலை எனக்கு மிகவும் பிடித்த உடை. பெண்களுக்கு அழகு என்ற கண்ணோட்டத்தில் சேலையை பார்த்தால் போதும். அதில், எனக்கு எந்த தவறும் தெரியவில்லை” என பேசியுள்ளார்.