Flash Back: நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்த மீனா.. எல்லாத்துக்கும் அந்த 2 பேர்தான் காரணம்!

கடந்த 1994 ஆம் ஆண்டு கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில்  சரத்குமார் இரு வேடங்களில் நடித்த படம் ‘நாட்டாமை’.

Continues below advertisement

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் நடந்த சுவாரஸ்மான நிகழ்வு ஒன்றை காணலாம். 

Continues below advertisement

கடந்த 1994 ஆம் ஆண்டு கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில்  சரத்குமார் இரு வேடங்களில் நடித்த படம் ‘நாட்டாமை’. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம் என பலரும் நடித்திருந்தனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு சிற்பி இசையமைத்திருந்தார். நாட்டாமையாக வரும் விஜயகுமாரும், சரத்குமாரும் அந்த கேரக்டராகவே வாழ்ந்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இப்படம் இன்றளவும் மிகவும் பிரபலமாகவே உள்ளது. பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 

இந்த நாட்டாமை படம் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு நடித்த நிலையில் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தார். இந்த படத்தில் ஒரு சுவாரஸ்மான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதனை நடிகை மீனா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதாவது, “நாட்டாமை படத்திற்காக கே.எஸ்.ரவிகுமார் என்னை அணுகிறார். ஆனால் நான் நடிக்க முடியாது எனவும்,  என்கிட்ட கால்ஷீட் கொடுக்க தேதி இல்ல விட்டுடுங்க என உறுதியாக சொல்லி விட்டேன். அதேசமயம் அந்த படத்தின் கதை சொல்லும் போது சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன் என சொன்னார்கள்.

அதேசமயம் என்னை விட சீனியர் நடிகையான குஷ்பூ இருக்கிறார். மேலும் இன்னொரு இளம் நடிகையாக சங்கவி இருப்பதாக சொன்னார்கள். இதைக்கேட்டு ஏற்கனவே 2 ஹீரோயின்கள் இருக்கும்போது எதுக்கு இந்த படம் நாம பண்ண வேண்டும் என்றே தோன்றியது. இதில் நடித்தால் என்ன கிடைக்கப் போகிறது என நினைத்திருந்தேன். மேலும் அந்த நேரத்தில் நான் மிகவும் பிஸியான நடிகையாக இருந்த காரணத்தால் நடிக்க மறுத்தேன்.

ஆனால் நிறைய பேர் என்னிடம் கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்க வேண்டும் அறிவுறுத்தினர். இந்த படம் பண்ணுங்க, 20 நாட்கள் தான் கால்ஷீட் தேவை. கே.எஸ்.ரவிகுமார் நேரத்தை எல்லாம் வீணாக்க மாட்டார் எனவும் அவருக்காக சிபாரிசு செய்தனர். சிறப்பான திட்டமிடலுடன் படத்தை எடுப்பார் என சொன்னார்கள். இதனையெல்லாம் கேட்டு நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

நாட்டாமை படம் தான் கே.எஸ்.ரவிகுமாருடன் என்னுடைய முதல் படம். முதல்முறையாக அவருடன் பணிபுரிய நான் மறுத்தேன். ஆனால் நாட்டாமை படத்தின் வெற்றியால் நான் மீண்டும் கே.எஸ்.ரவிகுமாருடன் முத்து, அவ்வை சண்முகி, வில்லன், தெனாலி, பாறை உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றினேன்” என மீனா தெரிவித்திருந்தார். 


மேலும் படிக்க: Actor Vishal: அரசியல் வருகை.. அறிக்கை மூலம் நேரம் குறித்த நடிகர் விஷால்

Continues below advertisement
Sponsored Links by Taboola