மறைந்த இயக்குனர் மனோபாலா, டி.ஆர்.பி கஜேந்திரன் மற்றும் நடிகர் மயில்சாமி ஆகிய மூவரின் நினைவை கொண்டாடும் வகையில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பாக நேற்று சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, பூச்சி முருகன், தேவயானி, மன்சூர் அலிகான், அனு மோகன் , டெல்லி கனேஷ், பொன்வண்ணன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். மூவரின் படங்களுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தியப்பின் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் இந்த மூன்று கலைஞர்களைப் பற்றிய தங்களது மனதிற்கு நெருக்கமான நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள் அனைவரும்.
மனோபாலாவின் நினைவின் மன்சூர்:
நிகழ்வில் பேசிய மன்சூர் அலிகான் பேசியபோது மனோபாலா தனக்கு கே எஸ் ரவிக்குமார் திரைப்படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானார் என்று கூறினார். படப்பிடிப்பின் போது இருவரும் சேர்ந்து நிறைய குசும்பு செய்திருக்கிறோம். சில நேரங்களில் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு கூட எங்கள் சேட்டை இருக்கும் என்று கூறினார் மன்சூர் அலிகான். ’படங்களில் நடித்து அனைவரும் சிரிக்க வைக்கும் நாங்கள் அப்படிதான் இருப்போம்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம் ஆகியவை ஏன் செயலற்று இருக்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும்போது தான் இவை எல்லாம் இன்னும் இருக்கின்றன என்றே எனக்கு தெரிகிறது என விமர்சித்தார் மன்சூர். முன்பெல்லாம் நடிகர்கள் சங்கம் பெரும் ஜாம்பவான்கள் இருந்த இடம். இதில் இருந்தவர்கள் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தவர்கள். ஆனால் இன்று பல நடிகர்கள் அடையாளம் தெரியாமல் இறந்துபோகிறார். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தனது பேச்சை முடித்துக் கொண்டார் மன்சூர் அலிகான்.
அழாமல் பேசுவது சிரமம்:
மன்சூரைத் தொடர்ந்து பேசிய டெல்லி கனேஷ் இயக்குனர் டி.பி கஜேந்திரன் தனது நகைச்சுவையானப் படங்களுக்காக பெயர்போனவர். மனோபாலாவை அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தனக்கு தெரியும் என்றும் அவரது வளர்ச்சியை படிப்படியாக தான் பார்த்திருப்பதாக கூறினார். பணம், புகழ் ஆகிய அனைத்தும் இருந்தும் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு சென்றுவிட்டிருக்க தேவை இல்லை.மனோபாலாவுடன் அனைவருக்கும் நல்ல நினைவுகள் இருக்கின்றன அவற்றைப் பற்றி அழாமல் இங்கு பேசுவது சிரமம் என்றார் டெல்லி கனேஷ். நிச்சயம் இன்னும் பத்தாண்டுகள் தாராளமாக இவர்கள் நம்முடன் இருந்திருக்க வேணியவர்கள் என்ற டெல்லி கனேஷ் பேசிக்கொண்டிருக்கும் போதே கண் கலங்கினார். தொடர்ந்து பேச முடியாம தனது பேச்சை , முடித்துக்கொண்டார் டெல்லி கனேஷ்.
இதனைத் தொடர்ந்து கார்த்தி,பொன்வண்ணன் பூச்சி முருகன்,என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இவர்களைப் பற்றி தங்களது நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றன.