தனுஷ், ஐஸ்வர்யா தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ள நிலையில், அது வெறும் குடும்ப சண்டைதான் விவாகரத்து இல்லை என்று தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா கூறினார். இந்த நிலையில் தனுஷூம் ஐஸ்வர்யாவும் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டியோவில் உள்ள சித்தாரா ஹோட்டலில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது. விவாகரத்து முடிவை அறிவித்ததில் இருந்து இந்த ஜோடியை சுற்றி சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், உடல் ஆரோக்கியம், மன நிம்மதி, ஃபிட்னெஸ் குறித்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருபவர் ஐஸ்வர்யா. யோகா, சைக்கிளிங், ஏரோபிக்ஸ் என வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மெனக்கெடுப்பவர். அவரது ஃபிட்னெஸ் பயணத்தின் டாப் 5 விஷயங்களை பார்ப்போம்.
யோகாசனம்
யோகா பயிற்சியில் சிறந்து விளங்குபர் ஐஸ்வர்யா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாரம்தோறும் புதிய யோகாசன பயிற்சி பற்றிய குறிப்புடன் அதனால் ஏற்படும் பயன்களையும் விளக்கி பதிவிட்டிருக்கிறார் அவர். அவருடைய ஃபிட்னெஸ் பயணத்தில் யோகாசனத்திற்கு முதன்மை இடம் உண்டு.
சைக்கிளிங்
தீவிரமாக சைக்கிள் பயிற்சி மேற்கொள்பவர் ஐஸ்வர்யா. நாள்தோறும் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொள்கிறார்.
ஏரோபிக்ஸ்
உடல் தசைகளை வலுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க ஏரோபிக்ஸ் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஏரோபிக்ஸ் பயிற்சியில் திறன் பெற்று விளங்கும் ஐஸ்வர்யா, தவறாது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஜிம்
உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய, கட்டுக்கோப்பான உடலை வைத்திருப்பது அவசியம். ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அலசிப் பார்த்தால் தெரியும், அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜிம்மிற்கு சென்று தன்னை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறார்.
குதிரை ஓட்டுதல்
முறையாக குதிரை ஓட்ட கற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, அவ்வப்போது குதிரை ஓட்ட பயிற்சி மேற்கொள்கிறார். இது முழு உடலுக்கும் புத்துணர்ச்சி தருவது மட்டுமின்றி, சிறந்த வொர்க்-அவுட்டாகவும் இருக்கிறது
பரதநாட்டியம்
முறையாக பரதநாட்டியம் கற்றுக்கொண்டுள்ள ஐஸ்வர்யா, சர்வதேச மேடைகளில் நடனமாடி உள்ளது மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கு பரதநாட்டியம் வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்