நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றுகிறார். முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கோட்டையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். ஆளுநர் கோடியை ஏற்றும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. முப்படையினர், காவல்துறையினர் உள்ளிடோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்று கொண்டார். 


 






கொடி ஏற்றத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குடியரசு தின விழா அணிவகுப்பில் டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றுள்ளன. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார்,வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரர் அழகு முத்துகோன் சிலைகள் இடம் பெற்றிந்தன. அதேபோல்,பெரியார், ராஜாஜி,காமராஜர்,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகளும் இருந்தது. 


அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சிகளுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றது. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், மெரினா கடற்கரையில் விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.


தொடர்ந்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் கைகளால் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த காவல் நிலைய விருதுக்கான முதல் பரிசு திருப்பூர் தெற்கு நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையம், மதுரை அண்ணாநகர் காவல் நிலையம் 2 மற்றும் 3 ம் பரிசு பெற்றது. 


சென்னையில் உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் தீர ராஜேஸ்வரிக்கும், விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்போர் ராஜீவ் காந்திக்கும் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. கள்ள சாராயத்தை கட்டுபடுத்திய காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கமும் வழங்கப்பட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண