விவேக் அக்னிஹோத்ரி


கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. காஷ்மீரை மையக் கதைக்களமாக வைத்து எடுக்கப் பட்ட இந்தப் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சார கருத்துக்களை வெளிப்படுத்துவதாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த் ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருதை மத்திய அரசு வழங்கியது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. சமூக ஆர்வலர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலர் தங்களது கண்டங்களை பதிவு செய்திருந்தார்கள்.


வாக்ஸின் வார்


இதனைத் தொடர்ந்து விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்த படமாக வாக்ஸின் வார் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இந்தப் படம் மிக சுமாரான வரவேற்பைப் பெற்றது. கொரோனா நொய்த் தொற்றுக்கு மாற்று மருந்தான கோவாக்ஸினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உருவாக்கியதை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. நானா படேகர், பல்லவி ஜோஷி, ரைமா சென், சப்தமா கெளடா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஐ ஆம் புத்தா நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த படம் குறித்தான தகவலை வெளியிட்டுள்ளார் விவேக் அக்னிஹோத்ரி.


பர்வா






மகாபாரதத்தை மையப்படுத்தி கன்னட எழுத்தாளர் எஸ்.எல் பைரப்பா எழுதிய பருவன் என்கிற நாவலை மையப்படுத்தி தனது அடுத்தப் படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் பைரப்பா, விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி மற்றும் தயாரிப்பாளரான பல்லவி ஜோஷி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். தங்களது தயாரிப்பு நிறுவனமான புத்தா ப்ரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாக விவேக் தெரிவித்துள்ளார்.


மொத்தம் மூன்று பாகங்களாக இந்தப் படத்தை இயக்க இருக்கிறார் அவர். மேலும் மகாபாரதத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குவதே தனது  நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது என்று முன்னதாக நேர்க்காணல் ஒன்றில் பகிந்துகொண்டிருந்தார் விவேக். இந்தப் படத்திற்கு பின் தான் அனேகமாக படங்களை இயக்குவதை கைவிட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க : The Vaccine War Review: தேசப்பற்று.. கொஞ்சம் வதந்தி.. கொஞ்சம் பிரச்சாரம்.. கொஞ்சம் உணர்ச்சிகள்.. வாக்ஸின் வார் திரைப்பட விமர்சனம்..


The Kashmir Files: மலிவான அரசியலுக்கு தேசிய விருதை பயன்படுத்தாதீங்க - காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து வசைபாடிய முதல்வர் ஸ்டாலின்