PCOD Diet: PCOD பிரச்சனையா? உங்கள் உணவுகளில் இந்த மாற்றத்தை கொண்டு வாருங்கள்!

PCOD சிக்கல் உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான டயட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Continues below advertisement

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓடி) என்பது ஒரு ஹார்மோன் பிரச்சனை ஆகும். இது உங்கள் ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களை சமநிலையிலிருந்து வெளியேற்றும். இது பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள், அதிகப்படியான முக முடி, இன்சுலின் எதிர்ப்பு, கருவுறுதல் பிரச்சனைகள் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புடையது.

Continues below advertisement

மரபியல், மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள், மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பல காரணிகள் PCOD க்கு காரணமாகின்றன. பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு. பிசிஓடி-யால் ஏற்படும் எடையை குறைப்பது எளிதல்ல. இருப்பினும், தொடர்ச்சியான உடற்பயிற்சி முறை மற்றும் உணவுத் திட்டம் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

பிசிஓடி எடையுடன் தொடர்புடையதா?

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது உடல் பருமன் தொடர்பானது. எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை பிசிஓஎஸ் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இந்த நிலையில் உள்ள பெரும்பாலான பெண்கள் அதிக எடை அல்லது பருமனானவர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

PCOD உடன் உடல் எடையை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்?

நீங்கள் PCOD பிரச்சனை காரணமாக, உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்கள் என்றால், நீங்கள் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் உணவு பழக்கம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பதப்படுத்தப்படாத,  வீட்டில் தயாரிக்கப்பட்ட  எளிய ஆரோக்கியமான உணவுகள் PCOD பிரச்சனைக்கு சிறந்தது.

pcod -யால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என கூறப்படுகிறது.  அதே நேரத்தில் கெட்ட கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை உண்ணுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது. உடல் எடையை குறைப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என கூறப்படுகிறது. 

1. எளிய கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக complex கார்போஹைட்ரேட்டுகள்:

உணவியல் நிபுணர்கள் கூறுவதாவது, "எளிய கார்போஹைட்ரேட்டுகளில் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லை மற்றும் இதன் மூலம்  இரத்த குளுக்கோஸ் ஸ்பைக் அதிகரிக்கலாம். complex கார்போஹைட்ரேட்டுகள் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் ஆகும்.  அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் நச்சுத்தன்மையை நீக்க உதவுகின்றன.  பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், ஓட்ஸ், முழு கோதுமை போன்றவை" இவை complex கார்போஹைட்ரேட்டுகள். இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இது உங்கள் எடை குறைப்பு உணவில் முக்கிய காரணியாகும்.

2. டீ/காஃபி சாஸ்ட்பெர்ரி டீ:

வழக்கமான தேநீர் மற்றும் காஃபியில் டானின்கள் மற்றும் காஃபின்கள் உள்ளன. அவை உங்கள் கார்டிசோல் அளவை சீர்குலைத்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கலாம் என கூறப்பட்டுகிறது.  மறுபுறம், சாஸ்ட்பெர்ரி தேநீர், உங்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

3. பழங்களை முழுவதுமாக சாப்பிடுங்கள்:

பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிட வேண்டும் என கூறப்படுகிறது.  பழச்சாறுகள் உங்கள் சர்க்கரை அளவுகளில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தலாம். முழு பழங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் பழச்சாறுகளில் இருப்பதில்லை.  முழு பழங்கள், அவற்றின் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்தை முழுமையாக கொண்டிருக்கும். முழு பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கான, உங்கள் PCOD டயட் திட்டத்திற்கு சிறந்த தேர்வாகும்.

4. புரதம் நிறைந்த காலை உணவு:

புரதம் நிறைந்த காலை உணவோடு உங்களின் ஒவ்வொரு தினத்தையும் தொடங்குங்கள். அவை , உங்களை முழுதாக உணரவைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், உங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவும். 

5. பால் மாற்றுகளைத் தேர்ந்தெடுங்கள்:

பால் சார்ந்த பொருட்களுக்குப் பதிலாக, பாதாம் அல்லது சோயா பால் போன்ற பால் அல்லாத மாற்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.  பால் பொருட்களை கட்டுப்படுத்து நல்லது. ஏனெனில், பால் இன்சுலின் அளவை உயர்த்தும், இது முகப்பரு மற்றும் எடை பிரச்சினைகள் உட்பட PCOD அறிகுறிகளை மோசமாக்கும். எனவே. எடை இழப்புக்கான உங்கள் PCOD உணவு அட்டவணையில் பால் மற்றும் பால் உணவுப் பொருட்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola