Aditi Shankar Video: ’நான் ரெடிதான்’ பாடலுக்கு காருக்குள் குத்தாட்டம் போட்ட அதிதி.. தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
Aditi Shankar Video: ’நான் ரெடிதான்’ பாடலுக்கு காருக்குள் குத்தாட்டம் போட்ட அதிதி.. தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கர்கள்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் வேதா என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜயை வைத்து பிரமாண்டமாக லியோவை இயக்கியுள்ளார். செவன் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லியோ வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் வேலையாக விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் என ஒவ்வொரு நடிகர்களின் பிறந்த நாளில் கிளிம்ஸ் வீடியோக்களையும், போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. லியோ திரையரங்குகளில் ரிலீசாக இன்னும் சில வாரங்கள்தான் இருப்பதால், இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
Just In




ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நடிகர் விஜய் பாடிய ‘நான் ரெடிதான் வரியா’ பாடல் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிபடுத்தியது. இப்பாடல் சமீபத்தில் இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்தது. இதனை படக்குழுவும் ரசிகர்களும் கொண்டாடினர். இந்த பாடல் வெளியான கால கட்டத்தில் பல்வேறு திரைப்பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்கள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது நடிகை அதிதி சங்கர் காரில் குத்தாட்டம்போட்டு வைப் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அதிதி சங்கர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்த விருமன் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திலும் இவர் ஒவ்வொரு பாடலையும் பாடி இருந்தார். படங்கள் மட்டும் இல்லாது விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
மேலும் படிக்க: Ajith Kumar: பைக் ரேஸ் போதும், இனி சைக்கிள் ரைட் தான்.. குழந்தைகள் படை சூழ அஜித்.. இணையத்தைக் கலக்கும் ஃபோட்டோ!