முத்தக்காட்சிகளில் நடிக்கக்கூடாது என்கிற தனது 18 ஆண்டுகால கொள்கையை தற்போது உடைத்துள்ளார் நடிகை தமன்னா.
கடந்த 18 ஆண்டுகளாக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கோலோச்சி வருகிறார் நடிகை தமன்னா. 18 ஆண்டுகளாக டாப் நடிகையாக விளங்கி வந்துள்ள தமன்னா தொடர்ந்து முத்தக் காட்சிகளுக்கு நோ சொல்லியே வந்துள்ளார். தற்போது இந்தக் கொள்கையை உடைத்து முத்தக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார் தமன்னா. அதுவும் தனது காதலர் என அண்மையில் தமன்னா அறிவித்த நடிக்க விஜய் வர்மாவுக்கா இந்தக் கொள்கையை தமன்னா உடைத்துள்ளார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தின் ஒரு கதையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தக் கதையில்தான் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு முத்தக்காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்தக் காட்சி குறித்து தமன்னா தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
“ இயக்குநர் சுஜய்யுடன் வேலை செய்வதற்கு நான் வெகு நாட்களாக ஆசைப்பட்டு வந்திருக்கிறேன். இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்வு செய்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் என்னுடைய பதினெட்டு ஆண்டுகால கரீயரில் நான் மிகக்குறைவான அளவிலேயே அந்தரங்கமான காட்சிகளில் நடித்திருக்கிறேன்.
நான் எந்த மாதிரியான் ஒரு பெண் என்றால் திரைப்படங்களில் அந்தரங்கமான காட்சிகளைப் பார்த்தாலே ”இது மாதிரி நான் நடிக்கவே மாட்டேன்” என்று சொல்லும் ஒரு நபராகத்தான் நான் இருந்திருக்கிறேன். இப்படியான நம்பிக்கைகளில் இருந்து வெளியே வருவதை என்னளவில் ஒரு பெரிய மாற்றமாக நான் கருதுகிறேன்.
இந்தியா என்பது ஒரு பெரிய நாடு. இந்த நாட்டின் பல பகுதிகள் நிறைய மாற்றங்களை எதிகொள்ள வேண்டியத் தேவை இருக்கிறது. அந்தரங்கமாக காட்சிகள் குறித்தான் அவர்களின் புரிதல் இணையதளத்தின் வருகைக்குப் பின் எவ்வளவோ மாறியுள்ளது. இந்த மாதிரியான ஒரு சூழலில் ஒரு நடிகராக என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள் என்னைக் கட்டுப்படுத்தக்கூடாது என நான் முடிவெடுத்திருக்கிறேன்.
இது முழுக்க முழுக்க கதையின் தேவையைக் கருதிய ஒரு முன்னெடுப்பு மட்டுமே. 18 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இதன் மூலம் நான் ஃபேமஸாவதற்காக இதனைச் செய்யவில்லை “ என தமன்னா தன் மீது அதிருப்தி தெரிவிக்கும் ரசிகர்களுக்கு பதிலடி தரும் வகையில் பதிலளித்திருக்கிறார்.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 29 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. தமன்னா, கஜோல், மிருனாள் தாகூர், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க: Ratsasan vs Por Thozhil: குற்றவாளியின் ஃப்ளாஷ்பேக் அவனை புரிந்துகொள்வதற்கா, தண்டிப்பதற்கா? ராட்சசன் - போர் தொழில்... ஒரு சிறு ஒப்பீடு!