தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சுனைனா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். 


சுனைனா:


2008ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளிவந்த காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுனைனா முதல் படத்திலேயே பாராட்டுகளை அள்ளினார். தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி படங்களில் நடித்து தனக்கு என தனி பெயரை தமிழ் சினிமாவில் தக்க வைத்து கொண்டார். கடைசியாக ரெஜினா படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். 


திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த சுனைனா அண்மை நாட்களாக சைலண்டாக இருந்த நிலையில், ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். மருத்துவமனை பெட்டில் படுத்தப்படி, கையில் ஐவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சுனைனா, தான் விரைவில் குணமாகி வந்து விடுவேன் என்றும், தனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குமாறு பதிவிட்டுள்ளார். 






அவரது இன்ஸ்டகிராம் பதிவை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு, எதற்காக இந்த சிகிச்சை என கேள்வி எழுப்பி வருகின்றனர். சுனைனாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றாலும், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. அண்மை காலமாக நடிகைகள் தங்களுக்கு இருக்கும் உடல்நல குறைவு குறித்து பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா தான் மயோடிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு நடிகைகளும் தங்களுக்கு இருக்கும் உடல் நல பாதிப்பு குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். 


மேலும் படிக்க: 


Leo Box Office: பிளடி ஸ்வீட்..! லியோ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு - 2023ல் இந்திய அளவில் முதலிடம்


Rajini viral video: இவர் டூப்பா...சூப்பர் ஸ்டாரா....இணையத்தில் வைரலாகும் டூப் ரஜினி வீடியோ