சாலையில் சிதறிக் கிடந்த கற்கள் அவ்வழியாக வந்த 4 சக்கர வாகன டயரில் பட்டு மேல்நோக்கி தெறித்ததில், பின்னால் பைக்கில் வந்த சீரியல் நடிகர் சக்திவேலின் கண்ணை பதம் பார்த்துள்ளது. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தனியார் தொலைக்காட்சியின் அது இது எது, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானவர் சக்திவேல். இவர் விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர் வழியாக சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒரு பக்க கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சக்திவேல் ரியாலிட்டி ஷோக்கள் மட்டும் இல்லாமல் ஏமாளி யூடியூப் சேனலிலும் லீடு ரோலில் பர்ஃபார்ம் செய்து வருகிறார். இவர் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ரீல்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்த நிலையில் சமீபத்தில் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது.
விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த நடிகர் சக்திவேலின் கண்ணை சாலையில் கிடந்த கற்கள் லாரி டயரில் சிக்கி பின்னாடி சென்றுக் கொண்டிருந்த அவரது கண்ணிலேயே பட அங்கேயே சக்திவேல் மயங்கி விழுந்துள்ளார்.
சில நிமிடங்கள் சாலையில் கிடந்த சக்திவேலை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது ஒரு கண்ணில் கல் பட்ட நிலையில், கட்டுப் போட்டிருக்கும் சக்திவேல் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவும் இன்ஸ்டாகிராம் பதிவும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அதில் அவர் பேசியிருந்ததாவது: "ஹெல்மட் போடலைன்னா 1000 ரூபாய் ஃபைன் போடுறாங்க. ஆனால், நான் ஹெல்மட் போட்டிருந்தேன். ஒருவேளை ஹெல்மட் போடாமல் இருந்தால் அந்த கல் பட்டு மண்டை உடைந்து இறந்தே போயிருப்பேன். ஹெல்மட் போடலனா அபராதம், சாலை விதி கோட்டை தாண்டினால் ஃபைன் போடுறாங்க. ஆனால், நல்ல சாலையை போடுவதில்லை, சாலையை ஒழுங்காக பராமரிப்பதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா இதெல்லாம் கொஞ்சம் சரி பண்ணுங்க, விருகம்பாக்கத்தில் அதிகமாக கற்கல் சிதறிக் கிடக்கின்றன. அதை சரி செய்யுங்க" என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் நடிகர் சக்திவேல், கடந்த மே 24ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.