ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு இருந்த நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளன.


ஷில்பா ஷெட்டி


பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி . தமிழில் குஷி படத்தில் நடிகர் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். கடந்த 2009ஆம் ஆண்டு, ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் முடித்தார். இவர்களுக்கு, வியான், டிலீனா மற்றும் சமீஷா என மூன்று குழந்தைகள் உள்ளனர். ஷில்பா ஷெட்டியின் கணவர் பலவித சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்க வந்தார்.


ஆபாச பட வழக்கு


ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா 5 ஸ்டார் ஹோட்டல்களில், ஆபாச படம் எடுத்து ஓடிடி தளங்களில் வெளியிட்டதாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து, அப்படத்தில் நடித்த இரண்டு மாடல் அழகிகள், படத்தின் தயாரிப்பாளர் மீடா மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜூ டூபே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜ் குந்த்ரா, இரண்டு மாதங்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லாததால்  ஜாமினில் வெளிவந்தார்.


97.79 கோடி சொத்து முடக்கம்






இது தவிர்த்து ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் முந்த்ரா ஆகிய இருவரின் மீதும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு இருந்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் மகாரஷ்ட்ரா காவல் துறை இணைந்து  பிட்காயின்களில் முதலீடு செய்தவர்களிடம் 6700 கோடி மோசடி செய்ததாக கூறி பிரபல தொழிலதிபர்களின் பெயரில் வழக்கு பதிவு செய்தது. இந்த பட்டியலில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.


தற்போது ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகிய இருவருக்கும் சொந்தமான 97.79 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில் மும்பையில் ஜூகு பகுதியில் இந்த தம்பதிக்கு சொந்தமான வீடி மற்றும் புனேவில் உள்ள பங்களா ஆகியவரை அமலாக்கத் துறையினரால் முடக்கப் பட்டுள்ளன. 




மேலும் படிக்க ; Sandeep Reddy Vanga : ”அந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்” என்ற பாலிவுட் நடிகர்; விளாசித் தள்ளிய அனிமல் பட இயக்குநர்