சமீரா ரெட்டி


 கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி (Sameera Reddy). தொடர்ந்து வெடி, வேட்டை, அசல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் பெரிய அளவில் படங்கள் கைகொடுக்கவில்லை என்றாலும் இந்தி, தெலுங்கு, பெங்காலி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்துள்ளார் சமீரா ரெட்டி. கடந்த 2014ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் சமீரா ரெட்டி. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக கைவிட்டு தனது குடும்பத்துடன் பெரும்பான்மையான நேரத்தை செலவிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும்  ரீல்ஸ் அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

Continues below advertisement


சில மாதங்கள் முன்பு தான் சினிமாவிற்கு நடிக்க வந்தபோது நிறையபேர் தன்னை மார்பக மாற்று சிகிச்சை செய்துகொள்ள வற்புறுத்தியதாக அவர் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


ஒரே நாளில் 23 லட்சம் செலவு செய்தேன்






ஒரே நாளில் தான் செய்த அதிகபட்ச செலவு என்ன என்கிற கேள்விக்கு பதிலளித்த சமீரா ரெட்டி “ துபாயில் ஒரு மாலில் நான் 23 லட்சம் செலவு செய்தேன். அந்த் மாலில் உங்களுக்கு தனியாக உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். அவரது உதவியுடம் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை வாங்கிக்கொள்ளலாம் ” என்று அவர் தெரிவித்தார்.




மேலும் படிக்க : GOAT: தியேட்டர்களில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்யின் கோட்! இன்று மட்டும் இத்தனை ஷோக்களா?


Nivin Pauly: வெளியானது முக்கிய ஆதாரம்! நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டில் புது ட்விஸ்ட் - சூடுபிடிக்கும் விசாரணை