தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் விஜய். இவரது கோட் படம் நேற்று வெளியானது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை என வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து விடுமுறை என்பதால் கோட் படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக முன்பதிவாகியுள்ளது.
இன்று மட்டும் எத்தனை காட்சிகள்?
தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் மண்டல வாரியாக எத்தனை காட்சிகள் இன்று மட்டும் ஓடுகிறது என்பதை கீழே காணலாம்.
- சென்னை - 1003 காட்சிகள்
- பெங்களூர் – 1140 காட்சிகள்
- மதுரை - 208 காட்சிகள்
- கோவை - 283 காட்சிகள்
- பாண்டிச்சேரி – 45 காட்சிகள்
- சேலம் - 104 காட்சிகள்
- வேலூர் - 79 காட்சிகள்
- திண்டுக்கல் - 35 காட்சிகள்
- கொச்சி - 313 காட்சிகள்
- திருச்சி - 68 காட்சிகள்
- திருவனந்தபுரம் – 359 காட்சிகள்
- மும்பை - 177 காட்சிகள்
- டெல்லி - 74 காட்சிகள்
விறுவிறுப்பாக நடக்கும் முன்பதிவு:
இதில் திருச்சியில் இன்று ஓடும் 4 காட்சிகளும் 100 சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளது. சென்னையில் 99 சதவீத காட்சிகள் முன்பதிவாகியுள்ளது. கோவையில் 96 சதவீதமும், பாண்டிச்சேரியில் 99 சதவீதமும், திண்டுக்கல் 96 சதவீதமும், சேலத்தில் 97 சதவீதமும் டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளது. இதில் இரவுக்காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்பனையாகிவிட்டது.
தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் கோட் படத்தின் வசூல் இன்று 100 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்சி வரை தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக கோட் படம் அமைந்திருப்பத ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களிடம் வரவேற்பு:
விஜய் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல நடிகர் மோகன் வில்லனாக நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் விஜயகாந்தின் உருவம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. முதல் நாளான நேற்று மட்டும் கோட் படம் ரூபாய் 43 கோடியை இந்தியா முழுவதும் வசூல் செய்துள்ளது.
ரஜினியின் பாடல், தோனியின் காட்சி, சிவகார்த்திகேயனின் கேமியோ, சூர்யாவின் கங்குவா போஸ்டர், அஜித்தின் மங்காத்தா பிஜிஎம் என ரசிகர்களை ரசிக்க வைக்கும் பல விஷயங்களை வெங்கட்பிரபு படத்தில் இணைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.