நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


தமிழ் சினிமாவில் சமந்தா


மாஸ்கோவின் காவிரி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த அவருக்கு இரண்டு மொழி திரையுலகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 






4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்தாண்டு பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து மயோசிடிஸ் என்னும் நோயால் அவதிப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சைப் பெற்றும் வருகிறார். மேலும் திருமண முறிவுக்கு பிறகு படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கி விட்டார். அந்த வகையில் புஷ்பா படத்தில் ஊ சொல்லவா பாடல் சமந்தாவுக்கு வேறு லெவலில் பெயர் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்தாண்டு சமந்தா நடிப்பில் குஷி படம் வெளியான நிலையில், அவர் இதுவரை புதிய படங்களில் கமிட் ஆகவில்லை. 


அமேசான் பிரைம் நிகழ்ச்சி 


இதனிடையே மும்பையில் இன்றைய தினம் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய பிரைம் வீடியோ புதிய மற்றும் பழைய தொடர்கள், படங்கள் தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு நடித்த சிட்டாடல் வெப் தொடரின் 2வது சீசன் பற்றிய அறிவுப்பும் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றிருந்தார். இதற்கான அவர் அணிந்து வந்த உடை இணையத்தில் ட்ரெண்டானது. பறவை இறக்கை போன்று உடையை அவர் அணிந்து கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 


இதே நிகழ்ச்சியில் சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவும் பங்கேற்றார். விவாகரத்துக்குப் பின் இருவரும் ஒரே மேடையில் தோன்றியது ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இருவரும் சந்தித்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.






மேலும் படிக்க: Actor Vijay: “கேரள ரசிகர்களுக்கு சமர்ப்பணம்” - கெத்து காட்டிய விஜய்.. ஜாலியாக ஒரு செல்ஃபி!