UPSC prelims exam postponed: மே 26 ஆம் தேதி நடைபெற இருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வானது, மக்களவை தேர்தல் காரணமாக ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 

2024 ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வானது, வரும் மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

Continues below advertisement

இந்நிலையில், மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவானது, ஜூன் 4 ஆம் தேதி தெரியும் என அறிவிக்கப்பட்ட நிலையில், யுபிஎஸ்சி குடிமைப்பணி முதல்நிலை தேர்வானது மே 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.