நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் சாக்‌ஷி அகர்வால், தொடக்கத்தில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்த சாக்‌ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால்,  அவர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் ஆனார்.


விஸ்வாசம், காலா, டெடி போன்ற படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் தற்போது யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டியில் அவர் தனது காதல் கதையை பகிர்ந்துள்ளார். அதில், சாக்‌ஷி அகர்வால் கூறியிருப்பதாவது, “அண்ணா பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ. கோல்டு மெடலிஸ்ட் மாணவி நான். ஒரு எம்.எல்.சி. நிறுவனத்தில் நல்ல வேளை. நல்ல சம்பளம்தான் வாங்கிக்கொண்டு இருந்தேன்.




இருந்தாலும் வாழ்க்கையில் எதையோ இழந்ததைப் போன்ற உணர்வு இருந்தது. அப்போது, ஒரு விளம்பரத்திற்கு மாடலாக சென்றேன். அது ஒர்க் அவுட்டாகி விட்டதால் சினிமாவில் செட்டில் ஆகிவிட்டேன். கல்லூரி படிக்கும்போது எனக்கும் காதல் வந்தது.


அந்த காதல் உண்மையில் ஒரு அழகான காதல். நான் காதலித்த நபர் மிகவும் ரசிக்கக்கூடியவர். கல்லூரி ரொம்ப கண்டிப்பான கல்லூரி என்பதால் இருவரும் அதிகம் பேச முடியாது. இதனால், கண்களால் மட்டுமே எங்கள் காதல் வளர்ந்தது. மூன்று ஆண்டுகள் இப்படித்தான் எங்கள் காதல் சென்றது. மாதத்தில் என்றாவது ஒருநாள் காபி ஷாப்பில் சந்தித்து பேசுவோம்.




அவர் கல்லூரியின் ஹாஸ்டலில் இருந்ததால் யாருக்கும் தெரியாமல் காலேஜ் முடிந்த பிறகு போன் செய்வார். அவரது போனுக்காக நான் போனை பக்கத்திலே வைத்துக்கொண்டு பல மணி நேரம் காத்து இருந்தேன். அது வாழ்க்கையில் மிகவும் அழகான தருணம். காதலனை பார்ப்பதற்காக காத்திருப்பது, பேசுவதற்காக ஏங்குவது என காதலின் அழகு அது. இப்போது இருக்கும் இளம் காதலர்கள் இவ்வாறு இல்லை.” என்று உருக்கமாக தனது காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு கீழே பலரும் சாக்‌ஷி அகர்வாலின் காதலன் யார்? என்று கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். அதேசமயத்தில் சிலர் ஏன் பிரிந்தீர்கள்? என்ன ஆனது என்றும் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.  


மேலும் படிக்க : “எல்லாமே சூப்பர்தான்... ஆனால் இதை தவிர்த்திருக்கலாம்” - ஸ்டாலின் ஆட்சி குறித்து நடிகர் விஜய்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண