சீனியர் தேசிய கூடைப்பந்து போட்டியில் 10ஆவது பட்டத்தை வென்ற தமிழ்நாடு வீரர்கள் வலையை வெட்டி கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற 71-வது சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு 87-69 என்ற புள்ளிக்கணக்கில் நடப்புச் சாம்பியனான பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவில் இந்தியன் ரயில்வேஸ் அணி 131-82 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தியது.
ஆடவருக்கான போட்டியில் பஞ்சாப் வேகத்தை தக்கவைத்து, திரும்பிப் பார்க்காமல் இருந்தபோது, தமிழ்நாடு மெதுவான தொடக்கத்திற்குப் பிறகு முன்னேறியது. அரவிந்த் 26 புள்ளிகளுடன் மற்றும் அரவிந்த் குமார் 21 புள்ளிகளுடன் தங்கள் பரம எதிரிக்கு எதிராக நன்றாக விளையாடிதால் இந்த வெற்றி சாத்தியமானது.
இதனைத்தொடர்ந்து, சீனியர் தேசிய கூடைப்பந்து போட்டியில் 10வது பட்டத்தை வென்ற தமிழ்நாடு வீரர்கள் வலையை வெட்டி கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
வீடியோ:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்