Sada speach: தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் பிரபலமான சதா தனக்கு ஏற்பட்ட கசமான அனுபவங்கள்  குறித்து பகிர்ந்துள்ளார். அந்த காட்சியில் ஏன் நடித்தேன் என நினைத்து இதுவரை வருந்துவதாக சதா கூறியுள்ளார். 


சதா:


தெலுங்கில் வெளிவந்த அதிபுதிரி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை இயக்குநர் தேஜா இயக்கி இருந்தார். அதிபுதிரி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ஜெயம் என பெயரிடப்பட்ட படத்தை இயக்குநர் மோகன் எடுத்த போது, அதில் ஹீரோவாக அவரது தம்பி ரவி அறிமுகமானார். இதேபோன்று தமிழ் சினிமாவில் முதல் முறையாக சதா அறிமுகமானார். ஜெயம் படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றதால் ரவியின் பெயர், ஜெயம் ரவி என சினிமா வட்டாரத்தில் அறிமுகமானது. 


ஜெயம் படத்தில் ஹோம்லி லுக்கில் வந்து கலக்கிய சதா அனைவருக்கும் பிடித்த ஹீரோயினாக மாறினார். ஜெயம் படத்தின் வரவேற்பால் சதாவுக்கு அஜித்துடன் இணைந்து திருப்பதி, மாதவனுடன் பிரியசகி, விக்ரமின் அந்நியன் படங்களளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என நடித்து கொண்டிருந்த போது சதாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. தமிழில் அவர் கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ரியாலிட்டு ஷோக்களில் பங்கேற்று வருகிறார். 


கண்ணீர் விட்டு அழுத சதா:


இந்த நிலையில் அண்மையில் படப்பிடிப்பின் நிகழ்வுகள் குறித்து சதா பேசி இருந்தார். அதில், தமிழில் தனது முதல் படமான ஜெயம் படத்தின் ஷீட்டிங் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் அவரது நாக்கால் சதாவின் கண்ணத்தை தீண்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என பலமுறை இயக்குநரிடம் சொன்னதாகவும், ஒருக்கட்டத்தில் கெஞ்சி கூட கேட்டதாகவும், ஆனால் படத்தில் அந்த காட்சி இடம்பெற வேண்டும் என கூறி அதை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சீனில் நடித்து முடித்த பிறகு வீட்டிற்கு சென்று அழுததாகவும் சதா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: Iraivan: இதயம் பலகீனமானவங்க ஜாக்கிரதை.. ஜெயம் ரவியின் இறைவன் படத்துக்கு ஏ சான்றிதழ்.. இதுதான் காரணம்!


Sai Pallavi: ‘கேவலமான நோக்கம்’.. திருமண வதந்தி பரப்பியவர்களை வெளுத்து வாங்கிய சாய் பல்லவி!