விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேலைனு வந்துட்டா வேலைக்காரன். இந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் காமெடி மிகவும் பிரபலம். இந்த படத்தில் புஷ்பாவாக நடித்தவர் ரேஷ்மா பசுப்புலெட்டி. இவர் தற்போது அபி டெய்லர்ஸ், பாக்கியலட்சுமி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.


இன்ஸ்டாகிராமல் எப்போதும் பரபரப்பாக இயங்கி வருபவர். அவ்வப்போது, தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஏ.. பொல்லாத உலகம்” பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், தனது புதிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில், அவர் இடுப்பில் டாட்டூ குத்தியுள்ளார். இந்த டாட்டூ உள்ள ரேஷ்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க : Vetrimaaran New Bike | அன்னைக்கு Yamaha Rx 100.. இன்னைக்கு BMW R nineT Scrambler.. வெற்றிமாறன் வாங்கிய புதிய பைக்..!


நடிகை ரேஷ்மா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துள்ள ரேஷ்மா நடிப்பில் ஆர்வம் கொண்டவர். கணினி பொறியியல் பட்டதாரியான இவர் ஆரம்பத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார்.




பின்னர், தெலுங்கில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் தெலுங்கில் ஒளிபரப்பான லவ் என்ற தொடரில் நடித்தார். தமிழில் வாணி ராணி தொடர் மூலமாக அறிமுகமானார். 2015ம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் காமெடி மூலமாக மிகவும் பிரபலமானார். பிரபல தொடர்களான ஆண்டாள் அழகர், வம்சம், பகல் நிலவு, அன்பே வா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். பாக்கியலட்சுமி, அபி டெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.  






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண