திருநெல்வேலி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது, இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கியது, இதற்கான பயிற்சி நேற்று நடைபெற்ற நிலையில் ஐந்து பேர் அடங்கிய 20 குழுக்கள் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்கின்றனர், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன் பறவைகள் கணக்கெடுப்பை துவக்கி வைத்தார், இது குறித்து அவர் கூறும் பொழுது, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஜனவரி 28 மற்றும் 29 இல் கடற்கரை ஓரங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து முடிந்தது, இரண்டாவது கட்டமாக இங்கிலாந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது, கூந்தன்குளம், திருப்புடைமருதூர், ராஜவல்லிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 18 முக்கியமான குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது, 18 குளங்களிலும் ஒவ்வொரு இடங்களிலும் வனப்பணியாளர்கள், பறவை ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைவரும் இணைந்து கணக்கெடுப்பு நடைபெறுகிறது, 




இந்த ஆண்டு அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளதால் பறவைகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது, அதே போல குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் பரவி காணப்படுகிறது, கடந்த ஆண்டை விட இந்தாண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே போல பறவைகளின் எண்ணிக்கை இன்னும் ஓரிரண்டு வாரங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, நியூசிலாந்து, சைபீரியா  உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வந்து முட்டையிட்டு இங்குள்ள சீதோசன நிலை பறவைகள் இனப்பெருக்கத்திற்கு  உதவுவதால் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து குஞ்சு பொறித்து செல்கிறது, செங்கால் நாரை, கூழைக்கடா பாம்பு, தாரை என ஏராளமான பறவை இனங்கள் இங்கு கண்டறியப்படுகிறது, இது மார்ச், ஏப்ரல், மே, ஜீன் வரை பறவைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும், கொரோனா பரவல் காரணமாக கூந்தன் குளம் வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது,




அதே போல சுற்றுவட்டார மக்கள் பறவைகளை பாதுகாப்பதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தீபாவளி போன்ற சமயங்களில் கூட பட்டாசு வெடிக்காமல் பாதுகாத்து வருகின்றனர் என்று தெரிவித்தார், கடந்த ஆண்டு ஐம்பத்தி ஒன்பது பறவையினங்கள் கண்டறியப்பட்டது, அதே போல  25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கணக்கிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பில் இதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது,


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண