Vetrimaaran New Bike | அன்னைக்கு Yamaha Rx 100.. இன்னைக்கு BMW R nineT Scrambler.. வெற்றிமாறன் வாங்கிய புதிய பைக்..!

Vetrimaaran New Bike: பிரபல இயக்குநரான வெற்றிமாறன் புதிய பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படும் வெற்றிமாறன் BMW R nineT Scrambler என்ற புதிய பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

Yamaha Rx 100 பைக்

ஏற்கனவே வெற்றிமாறனிடம் கருப்பு கலர்  BMW மற்றும் Yamaha Rx 100 பைக் இருக்கிறது. இந்த Yamaha Rx 100  பைக்கானது, அவரது மனைவி ஆர்த்தி காதலித்துக் கொண்டிருந்த போது அவருக்கு வாங்கிக்கொடுத்தது. தற்போது புதுவரவாக இந்த பைக்கை வெற்றிமாறன் வாங்கியிருக்கிறார். 

தான் அறிமுகமான பொல்லாதவன் படத்தில் பல்சர் பைக்கை வைத்து கதை களத்தை அமைத்திருப்பார் வெற்றிமாறன். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து ஆடுகளம் படத்தை இயக்கினார்.

Also Read | Vetrimaaran New Bike: டாப் ஸ்பீடு எவ்வளவு தெரியுமா? - வெற்றிமாறன் வாங்கியிருக்கும் BMW R NineT Scrambler -இன் சிறப்பு தெரியுமா?

இரண்டு தேசிய விருதுகள் 

இந்தப்படத்திற்காக சிறந்த இயக்குநர், மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் என இரண்டு தேசிய விருதுகள் வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  ‘விசாரணை’  ‘ வட சென்னை’, ‘  ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் அசுரன் படத்திற்காக மீண்டும் அவருக்கு தேசிய விருது மீண்டும் வழங்கப்பட்டது.

தற்போது வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரியை வைத்து  ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட் ஆகியிருக்கும் வெற்றிமாறன் அமீர் இயக்க இருக்கும் புதிய படத்திற்கான கதையை தங்கவேலவனுடன் இணைந்து எழுதியிருக்கிறார்.  

 

Also Read | IPL 2022 Auction CSK: நேற்று சிஎஸ்கே தேர்ந்தெடுத்த வீரர்கள் யார் யார்?- இன்று ஏலத்தில் அசத்துமா?

Continues below advertisement
Sponsored Links by Taboola