ராஷ்மிகா மந்தனா


தமிழ் , தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் கலக்கி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவர் நடித்த புஷ்பா , இந்தியில் ரன்பீர் கபூர் உடன் அனிமல் ஆகிய படங்கள் இவருக்கு தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று தந்துள்ளன. சமீபத்தில் வெளியாகிய புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக இந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் சிகந்தர் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படம் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.


சிகந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா


தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 23 படத்தை இயக்கி வரும் முருகதாஸ் அதே நேரத்தில் இந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிகந்தர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகா " சமீப காலங்களில் நான் நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் சிகந்தர் படத்தில்  வழக்கமான ஒரு பாலிவுட் ஹீரோயினாக தான் நடித்திருக்கிறேன். அதனால் நீங்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பொறுத்துக்கொள்ள வேண்டும்" என ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.






படம் வெளியாவதற்கு முன்பே தன்னுடைய கதாபாத்திரம் டம்மியாக இருக்கும் என்று ராஷ்மிகா வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சிகர்ந்தர் படம் தவிர்த்து தெலுங்கில் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியுள்ளார். தேவிஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 





மேலும் படிக்க : நீங்க காதல் பண்ண அரசு பில்டீங் தான் கிடைச்சதா... விக்னேஷ் சிவன் செய்த செயலை பாருங்கள்


Chiyaan 63 : மாவீரன் இயக்குநருடன் கைகோர்க்கும் சியான் விக்ரம்..சியான் 63 மாஸ் அப்டேட்