விக்னேஷ் சிவன்
கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன். சமீபத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையில் இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. நானும் ரவுடிதான் படத்தின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையில் காதல் மலர்ந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண்டு ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. உயிர் உலகு என இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்வது முதல் ஹோட்டலில் சாப்பிடப் போவது வரை தங்கள் வாழ்க்கையில் எல்லா தருணங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள் நயன் மற்றும் விக்னேஷ். முதலில் இந்த பதிவுகளை பார்த்து லைக் ஹார்ட்களை அள்ளிக் கொடுத்த ரசிகர்கள் ஒருகட்டத்திற்கு மேல் இவங்களுக்கு வேற வேல இல்லையா என்கிற அளவு சலிப்படைந்து விட்டார்கள். அடென்ஷன்க்காக அவர்கள் அப்படி செய்வதாக ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் விக்னேஷ் சிவன் பற்றிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் பரவாலாக ஷேட் செய்யப்பட்டு வருகிறது.
அரசு கட்டிடத்தை விலைபேசிய விக்னேஷ் சிவன்
" பாண்டிச்சேரி கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டல் அமைந்துள்ளது. கடற்கரையை பார்த்தபடி இருக்கும் இந்த ஹோட்டலை விக்னேஷ் சிவன் சொந்தமாக வாங்க விலை பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் சுற்றுலாத் துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணனை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் சீகல்ஸ் ஹோட்டல் அரசுக்கு சொந்தமான கட்டிடம் என்றும் அதை விற்க முடியாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். விலைக்கு வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஹோட்டலை லீஸூக்கு எடுக்க முடியுமா என்று விக்னேஷ் தீர்மானமாக இருந்துள்ளார். ஆனால் அரசு கட்டிடத்தை விற்கவோ லீஸூக்கோ தர முடியாது என்று உறுதியாக தெவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் நெட்டிசன்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. அரசு பில்டிங்கையே விலைபேசிய விக்னேஷ் சிவனை வைத்து மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.