அச்சு அசல் தன்னை போலவே இருக்கும் தனது மூத்த மகளின் வீடியோவை நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் மகள் அப்படியே உங்களை போலவே உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளார். அதில், லாலிபப்பு லாலிபப்பு பாடலில் வரும் ரம்பா மேடம் போன்று அவரின் மகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  தனது இரண்டு மகள்கள் பாடுவதை போன்ற வீடியோவை ரம்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 






உழவன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்பா. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா.தமிழில் ரம்பாவுக்கு உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டே மேஜிக் புட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி அம்பாசிடர் ஆகவும் மாறினார் ரம்பா.


அந்த நட்பின் காரணமாக அதன் உரிமையாளர் இந்திரகுமார் பத்மநாபனை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. பின் சில காலம் கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவனை பிரிந்து இருந்தார். பின்னர் இவர்கள் மீண்டும் ஒண்றினைந்த நிலையில்,  இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். இந்நிலையில் ரம்பா தன் சோசியல் மீடியா பதிவில் தன் மகள் லாவண்யாவின் போட்டோவை பகிர்ந்தார்.


அச்சு அசல் ரம்பாவை போலவே இருக்கும் முகபாவனை கொண்ட இவரின் புகைப்படம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் ரம்பாவை போல் இருக்கும் அவரின் மகளும் சினிமாவில் நடிப்பாரா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த ரம்பாவின் மகள் சினிமாவில் வலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 


மேலும் படிக்க: இணையருடன் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பது சரியா ? தவறா? - அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து..!