சர்வ தேச இந்திய திரைப்பட விருதுகள் (IIFA Awards 2023) வழங்கும் விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான இந்திய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். 


சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழா


ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் (IIFA Awards 2023) வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுககான விழா கடந்த மே 26,27 ஆகிய தேதிகளில் கோலகலமாக நடைபெற்றது. அபுதாபியின் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் இந்த விழா நடைபெற்றது,  இந்த விருது வழங்கும் விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இரண்டாவது ஆண்டாக இந்த விழா அபுதாபியில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் தொகுத்து வழங்கினர். 


விருதுகளின் விவரம் 



  • சிறந்த படம் - த்ரிஷ்யம் 2 (இந்தி)

  • சிறந்த இயக்குநர்-  ஆர் மாதவன் (ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்) 

  • சிறந்த நடிகர் (ஆண்) - ஹிருத்திக் ரோஷன் (விக்ரம் வேதா)

  • சிறந்த நடிகை (பெண்) - ஆலியா பட் (கங்குபாய் கதியவாடி)

  • சிறந்த துணை நடிகர் (பெண்) - மௌனி ராய் (பிரம்மாஸ்திரம்-1)

  • சிறந்த துணை நடிகர் (ஆண்):  அனில் கபூர் (ஜக் ஜக் ஜீயோ)

  • இந்திய சினிமாவில் மிகச்சிறந்த சாதனையாளர் விருது - கமல்ஹாசன்

  • சிறந்த தழுவல் கதை : அமில் கீயன் கான் மற்றும் அபிஷேக் பதக் (த்ரிஷ்யம் 2)

  • சிறந்த ஒரிஜினல் ஸ்டோரி : பர்வீஸ் ஷேக் மற்றும் ஜஸ்மீத் ரீன் (டார்லிங்ஸ்)

  • பிராந்திய சினிமாவில் சிறந்த சாதனையாளர் - ரித்தேஷ் தேஷ்முக் (வேத் படம்) 

  • சிறந்த அறிமுகம் (ஆண்): சாந்தனு மகேஸ்வரி (கங்குபாய் கதியவாடி), பாபில் கான் (காலா)

  • சிறந்த அறிமுகம் (பெண்): குஷாலி குமார் (தோகா அரௌண்ட் தி கார்னர்) 

  • சிறந்த பின்னணிப் பாடகி (பெண்):  ஸ்ரேயா கோஷல் (பிரம்மாஸ்திரம் 1)

  • சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) : அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரம் 1)

  • சிறந்த இசை -  ப்ரீதம் (பிரம்மாஸ்திரம் 1)

  • சிறந்த பாடலாசிரியர் - அமிதாப் பட்டாச்சார்யா  (பிரம்மாஸ்திரம் 1)

  • சிறந்த ஒளிப்பதிவு - கங்குபாய் கதியவாடி 

  • சிறந்த திரைக்கதை - கங்குபாய் கதியவாடி

  • சிறந்த உரையாடல் - கங்குபாய் கதியவாடி

  • தலைப்பு பாடலுக்கான சிறந்த நடன அமைப்பு -  பூல் பூலையா 2

  • சிறந்த ஒலி வடிவமைப்பு: பூல் புலையா 2

  • சிறந்த எடிட்டிங்: த்ரிஷ்யம் 2

  • சிறந்த பின்னணி இசை: விக்ரம் வேதா

  • சிறந்த எஃபெக்ட்ஸ் -  பிரம்மாஸ்திரம் 1

  • சிறந்த ஒலி கலவை: மோனிகா ஓ மை டார்லிங்


இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விருது வழங்கி கௌரவித்தார். இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதேசமயம் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட ஆலியா பட் தனது தாத்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.