விழுப்புரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் நாகராஜ பூபதி. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளின் தகவல் மற்றும் செய்திகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் நாகராஜ பூபதி வெளியிடும் செய்திகளில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அரசு நிகழ்ச்சி நடைபெறும் போது விழுப்புரம் மாவட்டத்தின் அமைச்சரான பொன்முடி பெயர் முன்னிலையிலும் அதன் பின்னர் திமுகவின் மாவட்ட கழக செயலாளரான புகழேந்தி பெயர் இரண்டாவதாக இடம்பெற்று வருகிறது அதன் பின்னர்தான் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெயர் இடம் பெறுவதால் தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு நிகழ்ச்சியின் போது முதலாவதாக அமைச்சர் பெயரும் பின்னர் மாவட்டத்தின் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெயர் இடம்பெறுவது வழக்கம், ஆனால் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி திமுகவின் மாவட்ட கழக செயலாளர் புகழேந்தி பெயரை முன்னிலைப்படுத்தி வருவதனால் அதிகளவிலான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. அரசு வழிமுறைக்கு அப்பாற்பட்டு மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் நாகராஜ பூபதி செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக எழுந்துள்ளது. இந்த நிலையில் அவர் திமுகவின் செய்தி தொடர்பாளரா? அல்லது மாவட்டத்தின் அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரா? என கேள்வி எழுந்துள்ளது.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தனது செய்தியாளர் சந்திப்பில், கலைஞர் அறிவாலத்தில் நடத்துவதற்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தில் செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றை மக்கள் செய்தி தொடர்பாளர் தெரிவிப்பது வழக்கமாகும், ஆனால் கலைஞர் அறிவாலத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பை மாவட்ட அலுவலர் தெரிவிப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்