இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா, சமீபத்தில் கோவாவிற்கு சுற்றுலா சென்றார். அப்போது, எடுத்த சில புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அதில், சில புகைப்படங்கள் அவர் நீச்சல் உடையில் இருப்பதுபோல் இருக்கின்றன. அதைப்பார்த்த ரசிகர்கள் ராதிகாவா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


நடிகை ராதிகா  ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முன்னேறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். பின்னர், சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சித்தி என்ற தொடர் மூலம் பல இல்லத்தரசிகளின் இதயங்களில் குடிகொண்டார். சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கொடி கட்டி பறந்த அவர், சமீபத்தில்தான் சின்னத்திரையில் இருந்து விலகினார். தனது கணவர் சரத்குமார் இணைந்து முழு அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார். தற்போது, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் படிக்க: Vijay 66 Update: தளபதி 66 அப்டேட்! சாமி சாமி பாடல் ஹிட்.. விஜய் படத்துக்கு பாடும் ராஜலட்சுமி!






இதற்கிடையில், கோவாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராதிகா, அங்கு இனிமையாக பொழுதை கழித்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் அவர் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க: Actress Manyaa | வானத்தைப்போல சீரியல் அண்ணனோட செல்ல தங்கச்சி.. புது துளசி பத்தி தெரியுமா?



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண