அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்த சோதனையில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 69 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் கணக்கில்  ரூ.2.37 கோடி, 1.130 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன்கள், வங்கிகளின், பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க: Thangamani DVAC Raid: கிரிப்டோவில் தங்கமணி முதலீடு செய்ய காரணம் என்ன? ஆதாரங்கள் எங்கு இருக்கும்?




 






 


குற்றச்சாட்டு என்ன?


 


1. 23-05-2016 அன்று, தங்கமணி மற்றும் அவரின் குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 1 கோடியாக இருந்தது (தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், இதர சொத்துக்கள் மதிப்பு -  1,01,86,017) 


 


2. 31- 03- 2020 அன்று, தங்கமணி மற்றும் அவரின் குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 8 கோடியாக அதிகரித்து காணப்பட்டது (8,47,66,318) 


 


3. 23.05.2016  முதல் 31.03.2020 வரையிலான காலத்தில், சட்டப்பூர்வமாக பெறப்பட்ட வருமானம் 5 கோடியாக உள்ளது (தொழில் வருவாவ், வங்கிக் கடன், முதலீட்டு சொத்து - 5,24,86,617).


 


4. அதே காலத்தில் ஏற்பட்ட செலவீனங்கள்  மட்டும் 2 கோடியாக உள்ளது. (2,64,78,335)  


5. 2016-20 வரையிலான பணிக்காலத்தில், வழக்கின் முதல் குற்றவாளியான பி.தங்கமணி,  இரண்டாவது குற்றவாளியான அவரின் மகன், மூன்றாவது குற்றவாளியான அவரின் மனைவி மூலம் 7 கோடி மதிப்பிலான சொத்து பெறப்பட்டுள்ளது.


 


6. ஆனால், அதே காலத்தில் இந்த மூவரின் சேமிப்புத் தொகை 2 கோடியாக மட்டுமே உள்ளது (2,60.08,282) - அதாவது, (3-4)      


 


எனவே, 2016-20 வரையிலான பணிக்காலத்தில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி, ரூ.4 கோடி (4,85,72,019) வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக மதிப்படப்படுகிறது. 



 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண