இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார்.கார்த்தி நடிப்பில் வெளியான தோழா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி. இந்த நிலையில் விஜய் படத்தை வம்சி இயக்க போகிறார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாகி வெளியாகி , விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது. 


இப்படம் பைலிங்குவலாக , அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. விஜய் 66 படத்திற்கான முதல் பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலை ராஜலட்சுமி - செந்தில் தம்பதியை வைத்து பாட வைத்துள்ளதாகவும் தெரிகிறது.


Nithya Menen | ‛அந்த சம்பவத்தை மறக்க முடியல... என்னை மோசமாக தாக்கியது’ - நடிகை நித்யா மேனன் வேதனை!




சமீபத்தில் புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலை ராஜலட்சுமி பாடி இருந்தார். நல்ல வரவேற்பை அந்த பாடல் பெற்றது. இதனையடுத்து தளபதி 66 படத்திலும் ராஜலட்சுமியை பாட வைக்கலாம் என இசையமைப்பாளர் யோசித்து மேலும் ஒரு பலமாக அவரது கணவரையும் சேர்ந்து பாட வைத்துள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் இது உண்மை என்றால் பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்


Pushpa First Review: ‛முதல் பாதி அட்டகாசமா இருக்கு... மீதியை வந்து சொல்றேன்..’ வெளியானது புஷ்பா விமர்சனம்!


விஜய் 66 , செண்டிமெண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் வம்சி “படத்தில் மனித உறவுகள் மற்றும் , உணர்ச்சிகள் இரண்டிற்கு இடமளித்து கதையை உருவாக்கியுள்ளேன். மேலும் விஜய் சாரின் ரசிகர்கள் மற்றும்  அவரின் ஸ்டார் வேல்யூவையும் மனதில் வைத்துதான் கதை எழுதியிருக்கிறேன் “ என தெரிவித்திருந்தார். 


Ashwin Kumar | ‛40 கதை தூக்கம்’ அஸ்வின் பேச்சு; படக்குழு எடுத்த அதிரடி முடிவு... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண