ரியால்டி ஷோவில் இளைஞரின் கன்னத்தை கடித்து முத்தமிட்ட நடிகை பூர்ணாவின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பிறகு, தமிழில் பல படங்களில் நடித்தார். தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘ப்ராஜக்ட் அக்னி’ படத்தில் நடித்திருந்தார். சசிகுமார் நடிப்பில் வெளியான ‘கொடிவீரன்’ படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்த பூர்ணா, அந்த படத்திற்காக மொட்டை அடித்து நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதற்காக பலரும் அவரை பாராட்டினார்கள். அவ்வப்போது, விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி தனது சமூகவலைதளங்களில் பக்கத்திலும் பூர்ணா வெளியிட்டு வருகிறார்.
பூர்ணா சமீப காலங்களில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார். தற்போது, பிரபல தெலுங்கு தொலைக்காட்சி சேனலான ஈடிவியின் 'தீ சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியில் அவர் நடுவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின்போது, போட்டியாளர் ஒருவர் சிறப்பாக நடனமாடியுள்ளார். இதற்காக அவரை பாராட்டும் விதமாக பூர்ணா, அவரின் கன்னத்தை கடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், ‘ஒரு நடுவர் பண்ற வேலையா இது’ என்று கலாய்த்து வருகின்றனர். போட்டியாளருக்கு பூர்ணா கன்னத்தை கடித்து முத்தம் கொடுப்பது இது முதல்முறை, இதற்கு முன்பே பல நிகழ்ச்சிகளில் அவர் இவ்வாறு செய்துள்ளதாகவும், அதுதொடர்பான புகைப்படங்களையும் நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில், தமிழில் சமீபத்தில் வெளியான 'தலைவி' படத்தில் நடித்ததற்காக பூர்ணா பாராட்டப்பட்டார். மறைந்த முதலமச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில், சசிகலா பாத்திரத்தில் பூர்ணா சிறப்பாக நடித்திருந்தார். தற்போது மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் நடித்து வருகிறார். பூர்ணாவின் கடி முத்தத்தை பலரும் தங்களின் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.