வடகிழக்கு மாநிலங்கள் எப்போதும் இயற்கை எழில் சூழ மிகவும் அழகாக அமைந்திருக்கும். இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சில சிறப்பான தளங்களில் அங்கு உள்ளன. மேலும் அங்கு இருக்கும் மலைகள் சூழந்த நிலபரப்பில் சாலையில் கார்களுடன் பயணம் செய்யும் போது நமக்கு ஒரு வகையான இன்பம் கிடைக்கும். அந்தவகையில் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் சூப்பர் ரேசிங் கார்கள் அணிவகுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அருணாச்சலப்பிரதேச முதல்வர் பெமா காண்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில்,"இந்த மாதிரி அழகான கார்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் நெஞ்சாலையில் வருவது இயற்கை அழகுடன் கூடுதல் அழகாக அமைந்துள்ளது. இதை பார்க்கும் போது இன்னும் அருமையாக உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் இதுபோன்ற சூப்பர் கார்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் சூப்பர் ரேசிங் கார்கள் தாம்ரோ-மரியாங் நெடுஞ்சாலையில் போகும் காட்சிகளையும் பதிவிட்டுள்ளார்.
இயற்கை எழில் சூழந்த அந்த நெடுஞ்சாலையில் கார்கள் செல்வதை பார்க்கும் போது நன்றாக அமைந்துள்ளது. இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் தன்னுடை சொந்த ஊரான தவாங்கிற்கு செல்லும் வழியில் இந்த கார்கள் செல்வதை படம்பிடித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே கடந்த 16ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் சூப்பர் கார்கள் வந்து இறங்கியுள்ளது தொடர்பாக இவர் பதிவை செய்திருந்தார்.
அந்த வீடியோவில் ஃபோர்டு, ஃபெராரி,அஸ்டின் மார்டின், ஆடி,பொர்ஸ்ச், லம்பாகினி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சூப்பர் கார்கள் இடம்பெற்று இருந்தன. இவை அனைத்தும் அருணாசலப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாலைகள் 1000 கிலோ மீட்டர் வரை பயணம் செல்ல உள்ளன என்று அப்பதிவில் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் தற்போது சூப்பர் கார்கள் சாலையில் ஓடுவது போல வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ!