தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 


கவனிக்க வைத்த கலை 


இயக்குநர் மாரி செல்வராஜ், கற்றது தமிழ் படத்தில் இருந்தே இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருப்பார். இப்படியான அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “நான் சென்னை வந்தவுடன் இயக்குநர் ராமிடம் என்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்தேன்” என தெரிவித்திருந்தார். அதேபோல் இயக்குநர் பா.ரஞ்சித்தையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். 


அந்த அளவுக்கு இந்த இரண்டு நபர்களும் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். மேலும், மேலும் எனக்கு எல்லா வாய்ப்பு இருந்தும் கலைதான் முக்கிய ஆயுதம் என்ற உறுதியோடு நான் இருக்க காரணம் விசிக தலைவர் திருமாவளவன் தான். எது காலத்துக்கும் மானுட சமூகத்துக்கு அவசியமோ, எது காலத்துக்கும் இந்த சமூகம் பெற வேண்டுமோ அதை நோக்கியே மாரி செல்வராஜின் படங்கள் இருப்பதை காணலாம். 


சிந்திக்க வைத்த படங்கள் 


2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தென்மாவட்டங்களில் நடக்கும் சாதிய கொடுமைகளையும், அத்தனையும் தாண்டி படித்து சாதிக்க நினைக்கும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் முயற்சியாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் பல காட்சிகள் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்தது.இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேசமயம் சாதிய படம் எடுக்கிறார் என்ற அழுத்தமான முத்திரையை அவர் மீது குத்தியது. 






இதனைத் தொடர்ந்து கர்ணன் என்ற படத்தை தனுஷை வைத்து இயக்கினார். இப்படமும் தென்மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமுகத்தில் அனைவரையும் சமமாக பார்க்க சொல்லும் மனிதர்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறையை உறைய வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தியிருந்தார். 


3வது படமாக அமைச்சர் உதயநிதியை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார். இந்த படம் மேற்கு மாவட்ட அரசியலை வைத்து எடுக்கப்பட்டது. இந்த 3 படங்களும் மாரி செல்வராஜின் கைவண்ணமாக அமைந்தது. தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெளிவாக சொன்னார். அதனாலேயே கொண்டாடும் மனிதராக மாரி செல்வராஜ் மாறியிருக்கிறார். 


ஜெயித்த மாரி செல்வராஜ் 


மாரி செல்வராஜ் சாதி படங்களை எடுக்கிறார் என்றால் படம் பார்ப்பவர்களுக்கு அது உண்மையில் கோபத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது. நமக்கே தெரியாமல், நம்மையே அறியாமல் இதுபோன்ற முன்னேற நினைக்கும் மக்கள் மீது நாம் காட்டும் பாரபட்சம் எப்பேர்ப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதை புரியும்போது தான் சொல்ல வந்த விஷயத்தில் மாரி செல்வராஜ் ஜெயித்து விடுகிறார். 


அடுத்தடுத்த படங்கள் 


இந்நிலையில் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இயக்கியுள்ள வாழை படத்தின் அப்டேட் இன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார். அதன்படி, வாழை படம் உலகம் பேசும்படமாக இருக்கும். எல்லா எல்லா பலமும் உனக்காக இருக்கும்” என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார். இதனால் வாழை படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.