சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்ற பாடகி: மேடைக்கு வந்த திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாத அப்பா: சூப்பர் சிங்கர் 10ல் நெகிழ்ச்சி

லின்சி தம்பதியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த லின்சியின் தந்தை, நிகழ்ச்சிக்கு வந்ததோடு லின்சியை கட்டியணைத்துப் பாராட்டியது அனைவரையும் உருக வைத்தது.  

Continues below advertisement

காதல் கல்யாணத்தால் பிரிந்த மகளை, சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 நிகழ்ச்சி மேடையில் அவரது தந்தை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இசைத்துறையில் புதிய புரட்சியை உருவாக்கிய சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10ஆவது சீசன், தற்போது தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. எப்போதும் போல், பல அற்புத திறமையாளர்களின் பங்களிப்பில்,  பல நெகிழ்வான சம்பவங்களுடன், பின்னணி பாடகர்களின் முன்னணி மேடையாக,  இந்நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. 

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி,  தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிய பின்னணியிலிருந்து  இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான  திறமையாளர்கள், சங்கீதத் துறையில் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் பலர் ஜொலித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10ஆவது சீசன் தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.  

பல பாடகர்களின் முன்னணி மேடையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் இந்த 10வது சீசனில்,  கர்நாடக சங்கீதப் பின்னணி, கானா பாடல் பின்னணி எனப் பலவிதமான களத்திலிருந்தும் பலவிதமான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.  

இம்முறை நடந்துவரும் நிகழ்ச்சியில் பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி,  சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, தற்போது தமிழில் எம்.ஏ பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். இவரின் குரலும் பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றது. 

வெட்டிங் சுற்றில் பல குரல்களில் பாடி அசத்திய லின்சி எனும் பாடகியின் கதையும் குரலும் பலரையும் நெகிழ வைத்தது. இசையால் காதலித்து இணைந்த தம்பதியாக ஜொலிக்கும் லின்சி தம்பதியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த லின்சியின் தந்தை, நிகழ்ச்சிக்கு வந்ததோடு லின்சியை கட்டியணைத்துப் பாராட்டியது அனைவரையும் உருக வைத்தது.  

பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புதத் தருணங்களுடன் பரபரப்பாக நடந்து  வரும்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த 10ஆவது சீசனிலும் களைகட்டி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola