இரட்டையரான நடிகை இவானா, இன்று தன் சகோதரருடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடி பகிர்ந்துள்ள ஃபோட்டோக்கள் வைரலாகியுள்ளன.
’லவ் டுடே’ படம் மூலம் இன்றைய தலைமுறை கோலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து கனவு நாயகியாக உருவெடுத்துள்ளவர் நடிகை இவானா. கேரளாவைச் சேர்ந்தவரான இவானா மலையாளத்தில், மாஸ்டர்ஸ் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக 2012ஆம் ஆண்டு அறிமுகமானார்.
தொடர்ந்து 2018ஆம் ஆண்டு இயக்குநர் பாலாவின் நாச்சியார் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவானா, சிவகார்த்திகேயனின் தங்கையாக ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவானா, அப்படத்தின் பெரும் வெற்றி மூலம் 2கே கிட்ஸின் கனவு நாயகியாக உருவெடுத்துள்ளார். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரும் ஹிட் படங்களுள் ஒன்றாக உருவெடுத்த லவ் டுடே படம், இவரை கோலிவுட் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் கொண்டு சேர்த்துள்ளது.
நடிகை த்ரிஷா உள்பட லவ் டுடே படத்தில் இவானாவின் நடிப்பை பலரும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இவானாவின் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்துள்ள நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இவானா.
இந்நிலையில் இன்று தன் 23ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவானா தன் உடன் பிறந்த இரட்டை சகோதரரை வாழ்த்தி தன் இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். என் பாதி உயிருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... எனக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு நீ தான்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இவானாவுக்கும் அவரது சகோதரருக்கும் நெட்டிசன்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
இவானா அடுத்ததாக நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகை நதியா, ஹரீஷ் கல்யாண், யோகி பாபு உள்ளிட்ட லெட்ஸ் கெட் மேரிட் படக்குழுவினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவானா அடுத்து கள்வன், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஹாலிவுட் க்ரிட்டிக் அசோசியேஷன் விருதுகள்… RRR திரைப்படத்திற்கு 4 விருது! "இந்தியாவிற்கு அற்பணிக்கிறேன்" - ராஜமௌலி ஸ்பீச் வைரல்!