எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்ற RRR திரைப்படத்திற்கு விருது மழை பொழிந்து வருகிறது. சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்று வரும் இத்திரைப்படம், ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் நான்கு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. சிறந்த அதிரடித் திரைப்படம் முதல் சிறந்த பாடல் வரை, RRR இயக்குனர் ராஜமௌளியும் ராம் சரணும் மேடையில் 4 விருதுகளை ஏற்றுக்கொண்டனர்.


றெக்கை முளைத்தது போல உள்ளது


ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த இந்த திரைப்படம் சிறந்த ஆக்ஷன் திரைப்படம் மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம் ஆகிய விருதுகளை வென்றதுடன், சிறந்த ஸ்டண்ட் மற்றும் சிறந்த பாடல் (நாட்டு நாடு) பிரிவுகளிலும் விருதுகளை வென்றுள்ளது. இயக்குனர் ராஜமௌலி சிறந்த ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டு, "நான் மேடைக்குப் பின்னால் சென்று கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன்… இரண்டாவது விருது… இப்போதே எனக்கு றெக்கை முளைத்தது போல உள்ளது! மிக்க நன்றி! அது எவ்வளவு அர்த்தம் நிறைந்தது என்பதை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது..." என்ற அவர் இந்த விருதை இந்தியாவுக்கு அர்ப்பணித்து, ‘மேரா பாரத் மகான்’ என்றார்.






ராஜமௌலி ஸ்பீச்


மேலும் பேசிய அவர், "அனைத்து ஸ்டன்ட்களையும் செயல்படுத்த அதிக முயற்சி எடுத்துள்ள எனது ஸ்டண்ட் மாஸ்டருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஜூஜி [ஸ்டண்ட் மாஸ்டர்] சில கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் எங்களுக்கு பெரிதும் உதவினார். மேலும், மிகவும் கடினமாக உழைத்து வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வந்து எங்கள் பார்வையைப் புரிந்துகொண்ட மற்ற ஸ்டண்ட் இயக்குநர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. எங்களுடைய ஒர்க்கிங் ஸ்டைலுக்கு ஏற்றவாறு தங்களின் ஒர்க்கிங் ஸ்டைலை மாற்றி, இன்றைக்கு நாம் பார்ப்பதை டெலிவரி செய்தார்கள்", என்றார். 


தொடர்புடைய செய்திகள்: Erode Election: 'என் உயிரோடு கலந்தது ஈரோடு; ஏன்?' - பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!


மீண்டும் சிறந்த படங்கள் தருவோம்


சிறந்த சர்வதேச படத்திற்கான விருதை வென்ற பிறகு, ராஜமௌலி ராம் சரணை தன்னுடன் மேடைக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாக ராம் சரண் உறுதியளித்தார். மேலும் ராஜமௌலி தனது விருதை இந்தியாவில் உள்ள தனது சக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அர்ப்பணித்தார். ராம் சரண், "இந்த அன்பை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி. இது ஒரு பெரிய பொறுப்பு. நாங்கள் மீண்டும் சிறந்த படங்களுடன் வந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்கப் போகிறோம்", என்றார்.






சிறந்த பாடகர் விருது


பெவர்லி ஹில்ஸில் உள்ள பெவர்லி வில்ஷயர் ஹோட்டலில் நடந்த ஹாலிவுட் விமர்சகர்கள் சங்க விருது விழாவில் ராம் சரண் ஒரு விருதை பெற்றுக்கொண்டார். அஞ்சலி பீமானி சிறந்த பாடகருக்கான விருதை பெற்றுக்கொண்டார். RRR தற்போது அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுக்காக காத்திருக்கிறது. 'நாட்டு நாட்டு' பாடலுக்கான சிறந்த பாடல் பிரிவின் கீழ் அகாடமி விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ள இந்த பிளாக்பஸ்டர் பாடலை ராகுல் சிப்லிகஞ்ச் பாடியுள்ளார். RRR திரைப்படம் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் பழங்குடியின தலைவர் கொமரம் பீம் மற்றும் புரட்சியாளர் அல்லூரி சீதா ராம ராஜு என்கிற கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பீரியாடிகள் டிராமா ஆகும். அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஷ்ரியா சரண், ரே ஸ்டீவன்சன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.