பாலிவுட்டின் பிரபல நடிகை ஹூமா குரேஷி (Huma Qureshi). ‘கேங்ஸ் ஆஃப் வஸேப்பூர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணைய தொடர்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ரஜினிகாந்துடன் காலா திரைப்படத்திலும், அஜித்துடன் வலிமை திரைப்படத்திலும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்தார். 


இவர் வலிமை திரைப்படத்தில் நடித்த பிறகு பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார். திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த ஹூமா குரேஷி உடல் எடை காரணமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தார். இதற்கான பதிலடிகளையும் சமூக வலைதளத்தில் கொடுத்து வந்தார். 


இந்நிலையில் ‘செபா - ஆக்ஸிடெண்டல் சூப்பர் ஹீரோ’ (Zeba: An Accidental Superhero) என்ற பெயரில் தான் எழுதிய தன் முதல் நாவலை  இன்று ஹூமா பெங்களூரு இலக்கிய விழாவில் வெளியிட்டார். இது பற்றி அவர் கூறுகையில், ”இது பேண்டஸி கலந்த நாவல். 1992 முதல் 2019 வரை நடக்கும் கதை. கொரோனா காலக்கட்டத்தில் இதை எழுதத் தொடங்கினேன். வெப் சீரிஸாக இதை எடுக்க நினைத்தேன் முடியவில்லை. என்றாவது ஒரு நாள் இது படமாகும். நடிப்போ, எழுத்தோ என் படைப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதை அதற்கான வாய்ப்பாக நினைக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார். 


குரேஷி புது டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர் நாடகங்களிலும் பணி புரிந்துள்ளார். பல மேடை நாடகங்களில் நடித்த பிறகு மும்பை சென்று  தனியார் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார். கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்  திரைப்படத்தில் ஹீரோயினாக  நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. மேலும் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். குறிப்பாக சிறந்த அறிமுக பெண் நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணைக் கதாப்பாத்திர நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார்.


மேலும் படிக்க 


Michaung Cyclone: மிக்ஜாம் புயல்! பொதுமக்களுக்கு உதவ வேண்டுமா? வாட்ஸ்அப் எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!


Electricity Bill:மின்கட்டணம் செலுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்... அரசு அறிவிப்பு


Cyclone Michaung Rescue: தலைநகரை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்.. பெருமூச்சு விடத் தொடங்கிய சென்னை..