தன் மகள் சுப்புலட்சுமியுடன் நடிகை கௌதமி வீடியோ பகிர்ந்துள்ள நிலையில், தாய், மகள் இருவரும் அழகில் அசத்துவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


1998ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு- சிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கௌதமி, 90களில் டான் ஹீரோயினாக வலம் வந்தார். தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த கௌதமி தெலுங்கி, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வந்துள்ளார்.


பின்னர் திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த கௌதமி, தமிழில் கடைசியாக கமலுடன் இணைந்து பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது விஷால் தயாரிப்பில் பிரசன்னா, ரஹ்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் கௌதமி நடித்து வருகிறார். நடிகையாக மட்டும் இல்லாமல் ஆடை வடிவமைப்பாளராகவும், வனவிலங்கு புகைப்படக் கலைஞராகவும் கௌதமி இருந்து வருகிறார். 


திரைக்கு வந்து 10 ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக இருந்த கௌதமி 1998ஆம் ஆண்டு தொழிலதிபர் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் 1999ஆம் ஆண்டு  விவாகரத்து பெற்று பிரிந்தனர். தம்பதிகள் இருவருக்கும் சுபலட்சுமி என்ற மகள் உள்ளார்.


இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கௌதமி, தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இருவரும் பார்ப்பதற்கு அக்கா, தங்கை போல் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். 


இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது மகளுடன் இருக்கும் வீடியோவை கௌதமி பகிர்ந்துள்ளார். அதில் ‘வா வா என் தேவைதையே’ எனும் அபியும் நானும் பட பாடலை இணைத்துப் பதிவிட்டுள்ளார். கௌதமி பகிர்ந்துள்ள இந்த வீடியோ இன்ஸ்டாவில் இதயங்களை அள்ளி வருகிறது.


ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மகளுடன் இருக்கும் புகைப்படத்தை கௌதமி பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் ஓணம் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.






கௌதமி மகள் சுப்புலட்சுமி விரைவில் கோலிவுட் சினிமாவில் எண்ட்ரி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Vettaiyaadu Vilaiyaadu: ரீ-ரிலீஸிலும் மிரட்டிய கமல் படம்.. வேட்டையாடு விளையாடு படம் வெளியாகி இன்றோடு 17 வருஷமாச்சு..!


Ajith Kumar: பைக் ரேஸ் போதும், இனி சைக்கிள் ரைட் தான்.. குழந்தைகள் படை சூழ அஜித்.. இணையத்தைக் கலக்கும் ஃபோட்டோ!